இந்த பரிசோதனை நடவடிக்கைகள் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் பாலித மஹிபாலவால் ஆரம்பித்து வைக்கபட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய மற்றும் தென் அமெரிக்க நாடுகளில் இருந்து இலங்கைக்கு வரும் சுற்றுலா பயணிகள் மூலமாக சீகா வைரஸ் தொற்றுப் பரவுவதை தடுப்பதற்காக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இதற்கமையவே கட்டுநாயக்க விமானநிலையத்தின் ஊடாக உள்நுழையும் பயணிகளை பரிசோதனை செய்யவும், இவர்களை தெளிவுபடுத்தும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை குறித்த நோய் தொடர்பில் யாராவது அடையாளங் காணப்பட்டால் பொரல்லை வைத்திய நிலையத்தில் பரிசோதனை செய்யப்பட்ட பின்னர் I.D.H மருத்துவமனையில் அனுமதிப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது இந்த பரிசோதனைகள் கட்டுநாயக்க விமான நிலையத்தில் உள்ள சுகாதார அமைச்சின் அலுவலக கட்டிடத்தில் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் சுகாதார பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.
மேலும் சீகா தொற்று பரிசோதனையின் பின்னர் பயணிகளின் மருத்துவ அறிக்கையானது நோய் விபரவியல் தரவை துறைக்கு அனுப்பி வைக்கப்படும் என்றும் இதற்கான அறிவுறுத்தல்கள் சம்பந்தப்பட்டவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் இந்த பரிசோதனைகளை மேலும் ஒழுங்குப்படுத்துவதற்காக குடிவரவு, குடியகழ்வு திணைக்களம், விமான நிலையம், விமான சேவைகள் நிறுவனம் மற்றும் ஸ்ரீலங்கா விமானசேவை ஆகியவற்றுடன் கலந்துரையாடல்களில் ஈடுபட்டுள்ளதாகவும் வைத்தியர் பாலித மஹிபால தெரிவித்துள்ளார்.