சீட்டுக்கட்டாக சரிந்த விக்கெட்டுகள்..அசராமல் 55 பந்தில் 72 ரன் விளாசிய வீரர்

169

 

பிக்பாஷ் லீக் தொடரில் அலெக்ஸ் ஹால்ஸ் பெர்த் அணிக்கு எதிராக 72 ஓட்டங்கள் விளாசினார்.

விக்கெட் சரிவு
சிட்னியில் பெர்த் ஸ்கார்சர்ஸ் மற்றும் சிட்னி தண்டர்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி நடந்து வருகிறது.

நாணய சுழற்சியில் வென்ற பெர்த் அணி பந்துவீச்சை தெரிவு செய்தது. தொடக்க வீரர் பான்கிராஃப்ட் 12 ஓட்டங்களில் ரன்அவுட் ஆனார்.

அதனைத் தொடர்ந்து அதிரடி காட்டிய கொஹ்லர் கேட்மோர் 18 பந்துகளில் 27 ஓட்டங்கள் எடுத்த நிலையில் ரன்அவுட் ஆனார்.

அதன் பின்னர் கூப்பர் மற்றும் அகர் ஓவர்களில் சிட்னி தண்டர்ஸ் அணி விக்கெட்டுகளை பறிகொடுத்தது.

ஹால்ஸ் சிக்ஸர் மழை
ஆனால் தொடக்க வீரர் அலெக்ஸ் ஹால்ஸ் (Alex Hales) சிக்ஸர்களை பறக்கவிட்டு ருத்ர தாண்டவம் ஆடினார். அவர் 55 பந்துகளில் 5 சிக்ஸர்கள், 4 பவுண்டரிகளுடன் 72 ஓட்டங்கள் விளாசினார்.

இதன்மூலம் சிட்னி தண்டர்ஸ் 137 ஓட்டங்கள் எடுத்தது. கூப்பர் கொனோலி 3 விக்கெட்டுகளும், ஆஷ்டன் அகர் 2 விக்கெட்டுகளும் கைப்பற்றினர்.

இதனைத் தொடர்ந்து பெர்த் அணி களமிறங்கி, 5 ஓவர்களில் 36 ஓட்டங்கள் எடுத்து ஆடி வருகிறது.

 

SHARE