சீனாவில் இறைச்சிக்காக கொல்லப்படும் நாய்கள்: எதிர்க்கும் விலங்கு நல ஆர்வலர்கள் (வீடியோ இணைப்பு)

324
சீனாவின் புகழ்பெற்ற நாய் இறைச்சி திருவிழாவில் 10 ஆயிரத்துக்கு மேற்பட்ட நாய்கள் கொல்லப்படுவதற்கு விலங்குகள் நல ஆர்வலர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.சீனாவின் யூலின் பகுதியில் ஆண்டுதோறும் ஜூன் மாதத்தில் யூலின் நாய் இறைச்சி திருவிழா நடைபெறும்.

இந்த திருவிழாவின் போது 10 முதல் 15 ஆயிரம் நாய்கள் வரை இறைச்சிக்காக கொல்லப்படுகின்றன.

தற்கு விலங்குகள் நல ஆர்வலர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். ஆனால் இந்த பழக்கத்தை கைவிட முடியாது என்றும் ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே நாய்கள் கொல்லப்படுகின்றன என்றும் விழா ஆதரவாளர்கள் கூறுகின்றனர்.

இந்நிலையில் இறைச்சிக்காக தினமும் 300க்கும் மேற்பட்ட நாய்கள் கொல்லப்படும் அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன.

சர்வதேச மனித நேயம் சங்கத்தை சேர்ந்தவர்கள் யூலின் பகுதியில் சோதனை நடத்தியுள்ளனர்.

அதில் தான் இந்த அதிர்ச்சி தகவல்கள் கிடைத்துள்ளன. மேலும் கொல்லப்படுவதற்காக கூண்டில் அடைத்து வைக்கப்பட்டிருக்கும் நாய்களில் பெரும்பாலானவையின் கழுத்தில் நாய்களுக்கான பட்டை மாட்டப்பட்டுள்ளது.

இதன் மூலம் பணத்திற்காக அந்த நாய்கள் கடத்தி கொண்டு வரப்பட்டுள்ளதும் தெரியவந்துள்ளது.

மேலும் பெரும்பாலான ஹொட்டல்களில் ஆண்டுதோறும் நாய் இறைச்சி கிடைப்பதையும் அவர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

இது தொடர்பாக அந்த அமைப்பை சேர்ந்த பீட்டர் லீ என்பவர் கூறியதாவது, யூலின் பகுதிக்கு நான் மேற்கொண்ட பயணங்களில் இது மிகவும் பயங்கரமானது.

ஏராளமான நாய்கள் மற்றும் பூனைகள் கூண்டில் அடைக்கப்பட்டுள்ளன. அதன் கண் முன்னறே மற்ற நாய்கள் கொல்லப்படுகின்றன.

இந்த காட்சி நாய்களை மன ரீதியாக பெரிதும் பாதிக்கின்றன. இந்த காட்சிகளை என்னால் எப்போது மறக்க முடியாது.

இந்த காட்சிகள் அனைத்து பள்ளிகளுக்கு அருகில் நடைபெறுவது அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது.

கொல்லப்படும் போது இந்த விலங்குகள் எழுப்பும் ஓலங்கள் மற்றும் அந்த காட்சிகள் அவர்களை பெரிய அளவில் பாதிக்கக்கூடும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

சீனாவில் நாய் இறைச்சி தொடர்பான கள்ள வர்த்தம் மிகப்பெரிய அளவில் உள்ளது.

அங்கு ஆண்டுக்கு 10 முதல் 20 மில்லியன் நாய்கள் வரை இறைச்சிக்காக கொல்லப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

SHARE