சீனா – சிறிலங்கா இடையே பொருளாதார தொழில்நுட்ப உடன்பாடு கையெழுத்து

239

சீனாவுக்கும் சிறிலங்காவுக்கும் இடையில் பொருளாதார மற்றும் தொழில்நுட்ப உடன்பாடு கையெழுத்திடப்பட்டுள்ளது. கடந்த புதன்கிழமை கையெழுத்திடப்பட்ட இந்த உடன்பாட்டின் கீழ், 13,800 மில்லியன் ரூபாவை சிறிலங்காவுக்கு சீனா கொடையாக வழங்கும்.

இந்த நிதி, பொலன்னறுவவில் சிறுநீரக நோயாளர்களுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவமனை ஒன்றை அமைப்பதற்குச் செலவிடப்படும்.

சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன கடந்த அண்டு சீனாவுக்குப் பயணம் மேற்கொண்டிருந்த போது, சீன அதிபர் ஜி ஜின்பிங்குடன் நடத்திய பேச்சுக்களில், இந்த கொடையை வழங்க இணக்கம் காணப்பட்டிருந்தது.ranil-Li-Keqiang

SHARE