அமெரிக்காவுக்கும், இந்தியாவுக்கும் இடையேயான உறவு குறித்து சீனா அச்சப்படத் தேவையில்லை என அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா தெரிவித்துள்ளார்.இதுகுறித்து அமெரிக்க தொலைக்காட்சிக்கு ஜனாதிபதி ஒபாமா அளித்துள்ள பேட்டியில், இந்தியா- அமெரிக்கா இடையிலான உறவு குறித்து ஊடகங்கள் வாயிலாக சீன அரசு தெரிவித்து வரும் கருத்துகள் ஆச்சரியத்தை உண்டாக்குகின்றன.
இந்தியாவுடன் அமெரிக்கா காட்டும் நல்லுறவு குறித்து சீனா அச்சமடையத் தேவையில்லை. இன்றைய காலகட்டத்தில் மக்களின் நலனுக்காக கூட்டுத் திட்டங்களில் ஈடுபடுவதற்கான வாய்ப்புகள் ஏற்பட்டுள்ளது. இந்தியாவில் பிரதமர் நரேந்திர மோடியுடனான எனது பேச்சுவார்த்தைகளில் இந்த வாய்ப்புகளுக்குத்தான் முன்னுரிமை அளிக்கப்பட்டது. சீனாவின் வெற்றி குறித்து நான் மிகுந்த அக்கறை கொண்டுள்ளேன், அந்நாட்டுடன் கட்டமைப்பான உறவுகளை தொடர்ந்து கடைபிடிப்பதை உறுதிப்படுத்துகிறோம். இந்தியாவுடன் நாங்கள் மேலும் நெருக்கமாக இருப்பதற்கு தேவையான அம்சங்கள் இந்தியாவிடம் உள்ளன. மிக குறிப்பாக, எங்கள் நாட்டின் பகுதிகளில் இருப்பதைப்போன்ற குடியரசின் மதிப்புகளையும், மேன்மையையும் இந்தியா பிரதிபலிக்கின்றது. சீனாவால் இதைப் போல் பிரதிபலிக்க முடிவதில்லை. கடல் ரோந்துப் பணி விவகாரங்களில் வியட்நாம், பிலிப்பைன்ஸ் போன்ற சிறிய நாடுகளை அச்சுறுத்தாமல், சர்வதேச விதிகளுக்குட்பட்டு சீனா அமைதித் தீர்வு காண வேண்டும். இதுபோன்ற விவகாரங்கள் குறித்த அமெரிக்காவின் கேள்விகளுக்கு ஒரு சிலநேரங்களில் மட்டுமே சீனாவிடம் இருந்து பதில் வருகிறது, மற்ற நேரங்களில் உரிய பதிலை அளிப்பதில்லை என தெரிவித்துள்ளார். ஒபாமா- தலாய்லாமா சந்திப்பு: சீனா கடும் கண்டனம் வாஷிங்டனில் வருகிற 5ம் திகதி நடைபெறும் தேசிய வருடாந்திர பிரார்த்தனை கூட்டத்தில் மத சுதந்திரம் என்ற தலைப்பில் உலகில் உள்ள முக்கிய மதத் தலைவர்கள் உரையாற்ற உள்ளனர். இந்த கூட்டத்தில் தலாய்லாமாவும் பங்கேற்கிறார், பராக் ஒபாமா எடுத்துள்ள முடிவுக்கு இன்று கண்டனம் தெரிவித்துள்ள சீனா அமெரிக்காவுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பாக நேற்று பீஜிங் நகரில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த சீன வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் ஹாங் ஜியி, திபெத் விவகாரத்தை பயன்படுத்தி சீனாவின் உள்நாட்டு பிரச்சனையில் தலையிடும் எந்த நாட்டையும் சீனா எதிர்க்கின்றது. தலாய்லாமாவை எந்த நாட்டு தலைவர் எவ்வகையில் சந்தித்தாலும் அதையும் சீனா எதிர்க்கின்றது. சீனா- அமெரிக்கா இடையிலான அனைத்துவகை இருதரப்பு உறவுகளையும் கருத்தில் கொண்டு, தேவையான விவகாரங்களை அமெரிக்கா முறையாக கையாள வேண்டும் என கூறியுள்ளார்.
|