இறக்குமதி செய்யப்படும் சீனி மீது விதிக்கப்பட்டிருந்த விசேட சந்தைப் பொருள் இறக்குமதி வரி 25 சதத்தினால் குறைக்கப்படுவதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.
அதன் மூலம், ஏற்கனவே கிலோ கிராம் ஒன்றுக்கு ரூபா 30 ஆக இருந்த குறித்த வரி, இன்று (18) நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் ரூபா 29.75 ஆக மாற்றமடைகின்றது.
குறித்த வரிக் குறைப்பின் மூலம், சீனி மீது விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டு விலை தொடர்பில் ஏற்பட்டுள்ள குழப்ப நிலை குறையும் என அரசாங்கம் தெரிவித்துள்ளது.
தற்போது, ஒரு கிலோகிராம் சீனியின் கட்டுப்பாட்டு விலை ரூபா 95 ஆக அரசு நிர்ணயித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.