இரண்டு நாட்கள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு சீன வெளிவிவகார அமைச்சர் வாங் ஜீ இன்று இலங்கை வருகின்றார்.
வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீரவின் அழைப்பின் பேரில் இலங்கை வரும் வாங் ஜீ எதிர்வரும் ஞாயிறு வரை நாட்டில் தங்கியிருப்பார்.
இந்த காலப்பகுதியில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் வெளி விவகார அமைச்சர் மங்கள சமரவீர ஆகியோருடன் பேச்சுவார்த்தைகளை நடத்தவுள்ளார்.
இதன் போது இரு நாடுகளுக்கும் இடையில் அரசியல், வணிகம், முதலீடுகள், சுற்றுலாத்துறை ஆகியவற்றை மேம்படுத்துவது குறித்து விவாதிக்கப்படவுள்ளது. சீனாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான புதிய ஒத்துழைப்பு மற்றும் கூட்டுறவு ஆகியவற்றை ஏற்படுத்துவது குறித்தும் கவனம் எடுக்கப்படவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேவேளை கடந்த ஏப்ரல் மாதம் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க சீனாவுக்கான பயணத்தை மேற்கொண்டிருந்த நிலையில் சீன வெளிவிவகார அமைச்சர் வாங் ஜீ இலங்கைக்கு வருகை தருகின்றமை குறிப்பிடத்தக்கது.