சீரற்ற காலநிலையிலிருந்து தப்பித்தது அநுராதபுரம்

283

சில தினங்களுக்குப் பிறகு அநுராதபுரத்தில் சீரான காலநிலை நிலவுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் 15ஆவது பௌர்ணமி தினத்துக்கான சகல ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாக அநுராதபுர நகராதிபதி டி.பீ.ஜீ.குமாரசிறி தெரிவித்துள்ளார்.

மேலும் பௌர்ணமி தினத்தை முன்னிட்டு அநுராதபுரம் நகருக்கு வரும் பயணிகள், அநுராதபுரம் பகுதியில் உள்ளவர்கள் குளங்கள், வாவிகளிலுள்ள நீரைப் பயன்படுத்துவதை தவிர்த்துக் கொள்ளுமாறும் அவர் பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அத்துடன் குறித்த கால்வாய்கள் மற்றும் குளங்கள், வாவிகளில் சில தினங்களாக பெய்த மழையின் காரணமாக பல அழுக்குப் பொருட்கள் கலந்துள்ளமையே இதைப் பயன்படுத்த வேண்டாம் என கோருவதற்கு காரணம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை அநுராதபுரம் பிரதேசத்தில் வெள்ளத்தினால் 524 குடும்பங்களைச் சேர்ந்த 1881 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இவர்கள் இராஜாங்கனை, மஹாவிலேச்சிய முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

625.117.560.350.160.300.053.800.210.160.90 (1)

SHARE