சீரியலில் நடித்து புகழ் பெற்ற நடிகை வித்யாவின் தற்போதைய நிலை

193

தேவயானி நடித்த கோலங்கள் சீரியல் மூலம் பிரபலமானவர் நடிகை ஸ்ரீவித்யா. சிறுவயதிலேயே நடிப்புத்துறைக்கு வந்துவிட்டார். எம்.பி.ஏ பட்டதாரியான இவர் சூர்யா நடித்த நந்தா படத்திலும் நடித்திருக்கிறார்.

தற்போது திருமணம் குழந்தை என செட்டிலாகிவிட்டார். அவரின் கணவர் தனியார் துறையில் வேலை செய்கிறாராம். இதனால் சில நாட்கள் சீரியலுக்கு பிரேக் விட்டிருந்தார்.

பின் சித்திரம் பேசுதடி, கைராசி குடும்பம் மூலம் மீண்டும் வந்தார். இந்நிலையில் தற்போது மீண்டும் பிரேக் கொடுத்து விட்டு போகிறாராம். காரணம் தொழில் செய்ய வேண்டும் என்ற விருப்பமாம்.

சுயமாக ஒரு தொழிலை தொடங்கியுள்ள வித்யா இப்போதைக்கு சீரியல் பிளான் இல்லை என்கிறார். சரி என்ன பிசினஸ் தெரியுமா? வேலைக்காக இங்கே தங்கியிருக்கும் பேச்சிலர்களுக்கு தேவையான உணவை ஆர்டர் எடுத்து செய்துகொடுப்பதாம். விரைவில் துணை இயக்குனர் ஆகவேண்டும் என விருப்பம் இருக்கிறதாம்.

SHARE