பிரபல தொலைக்காட்சியில் பகல் நிலவு என்ற சீரியல் மிகவும் பிரபலம். இளம் நடிகர்களை வைத்து வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் இந்த சீரியலில் இருந்து அன்வர்-சமீரா விலகியுள்ளார்கள்.
இதற்காக அவர்கள் நிறைய காரணங்கள் கூறினார்கள். இந்நிலையில் அந்த சீரியலில் நடிக்கும் சௌந்தர்யா அவர்களது பிரச்சனை குறித்து ஒரு பேட்டியில் பேசியுள்ளார். அதில் அவர், சமூக வலைதளங்களில் யார் என்ன நினைக்கிறார்களோ சொல்வார்கள். அவர்கள் அதை நம்பி, சீரியல் இயக்குனரிடம் எங்களுக்கு கார்த்திக்-சௌந்தர்யாவுடன் சீன்கள் வைக்காதீர்கள் என்றனர்.
அதை அவர்கள் ஏற்கவில்லை என்பதால் படப்பிடிப்பிற்கு லேட்டாக வருவது போன்ற விஷயங்களை செய்தார்கள். இதெல்லாம் எழுத்தாளர் மற்றும் இயக்குனரை மிரட்டும் விதம் என்றே சொல்லலாம் என்றார்.