சீறுகிறார் சீமான்

252

விநாயகர் சதுர்த்தி, கிருஷ்ண ஜெயந்தி உள்ளிட்ட பண்டிகைகளுக்கு விடுமுறை இருக்கும்போது, தைப்பூசத்துக்கு ஏன் விடுமுறை இல்லை என்று கேள்வி எழுப்பி உள்ளார் நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான்.

அண்டை மாநிலங்கள் கொண்டாடும் பண்டிகைகளுக்கு தமிழக அரசு பொது விடுமுறை அளித்து வரும் நேரத்தில் கடந்த சில வருடங்களாக தைப்பூசத் திருநாளுக்கு விடுமுறை அறிவிக்க வேண்டும் என்கிற கோரிக்கைக்கு தமிழக அரசு ஏன் செவி
சாய்க்கவில்லை என்று கேள்வி எழுப்பி உள்ளார் சீமான். போருக்குச் சென்ற முருகன் பாட்டன், முப்பாட்டன், பூட்டன் என்கிற உறவில் வருகிறார். அது மட்டுமின்றி தமிழக மக்களின் தமிழ் கடவுளாக மதிக்கப்பட்டு வழிபடப்பட்டு வருகிறார்.

இவருக்கான தினமான தைப்பபூசத்துக்கு விடுமுறை விடாதது ஏன் என்றும், வருகிற 24ம் திகதி தைப்பூசம் வருகிற நிலையில் தைப்பூசத்துக்கு விடுமுறை அறிவிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளார். அதோடு இஸலாம் ஆளும் நாடான மலேசியாவில் தைப்பூச தினத்தன்று பொது விடுமுறை உள்ளது என்றும், அமெரிக்காவில் பொங்கல் பண்டிகைக்கு பொது விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது என்றும் மேற்கோள் காண்பித்து உள்ளார்.

மேலும், ஜல்லிக்கட்டுப் போட்டிகளுக்கான தடையை வரவேற்று இருக்கும் நக்மாவுக்கும், எமி ஜாக்ஸனுக்கும்,வித்யா பாலனுக்கும் தமிழர்கள் பற்றி என்ன தெரியும் என்று கேள்வி எழுப்பியுள்ளார். மாட்டை வீட்டில் பிறந்த பிள்ளை போன்று கவனித்து வருபவர்கள் நாங்கள், அப்படிப்பட்ட மாடுகளை நாங்கள் வதைப்போமா, மாடுகளை அருகில் நின்றாவது நீப்ங்கள் பார்த்திருக்கிறீர்களா என்று வன விலங்கு காப்பக அதிகாரிகளுக்கு கேள்வியும் விடுத்துள்ளார்.

ஜல்லிக்கட்டுக்கு அனுமதி அளிக்காவிடில், தடையை மீறி ஜல்லிக்கட்டுப் போட்டிகளை நடத்துவோம் என்று மக்கள் கூறினால் நாங்கள் அவர்களுக்கு ஆதரவாக இருப்போம் என்றும், நீதிக்குத்தான் தலைவணங்க முடியுமே தவிர அநீதிக்குத் தலைவணங்க முடியாது என்றும் சீமான் காட்டமாகக் கூறியுள்ளார்.

SHARE