சீற்றத்தில் ஜனாதிபதி! எவன்கார்ட் விசாரணை இறுதி அறிக்கை கையளிக்க நடவடிக்கை

189

sris-600x330

பாரிய ஊழல் மோசடி விசாரணை ஆணைக்குழுவினால் விசாரணைகள் நிறைவு செய்து, மேலும் மூன்று அறிக்கைகள் எதிர்வரும் நாட்களில் ஜனாதிபதியிடம் ஒப்படைப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.

குறித்த அறிக்கைகளை ஒப்படைப்பதற்கு ஜனாதிபதியிடம் நாளொன்றை பெற்றுத்தருமாறு கோரப்பட்டுள்ளதாக ஆணைக்குழுவின் செயலாளர் எச்.டப்ள்யூ.குணதாஸ தெரிவித்துள்ளார்.

அதற்கான தினத்தை ஜனாதிபதி செயலகம் அறிவித்ததும் உடனடியாக விசாரணை நிறைவு செய்த அறிக்கையை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் ஒப்படைக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

எவன்கார்ட் மற்றும் ரக்னா லங்கா நிறுவனம் தொடர்பிலான விசாரணை அறிக்கையும் இதில் உள்ளடக்கப்பட்டுள்ளது.

ஒரு தொகை டைனமைட் காலாவதியாகும் வரையில் விற்பனை செய்யாமல் வைத்திருந்ததன் காரணமாக அரசாங்கத்திற்கு நட்டம் ஏற்படுத்தியமை தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசாரணை அறிக்கைகளும் இவ்வாறு ஜனாதிபதியிடம் ஒப்படைக்கப்படவுள்ளது.

எப்படியிருப்பினும் எவன்கார்ட் கொடுக்கல் வாங்கல்கள் தொடர்பில் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் மற்றும் முன்னாள் கடற்படை அதிகாரிகள் மூவரை நீதிமன்றத்திற்கு அழைத்து சென்றமை தொடர்பில் ஜனாதிபதியினால் அதிருப்தி வெளியிடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

SHARE