சீஸ் மிளகாய் பஜ்ஜி செய்வது எப்படி

302

சூப்பரான ஸ்நாக்ஸ் சீஸ் மிளகாய் பஜ்ஜி

தேவையான பொருட்கள் :

பஜ்ஜி மிளகாய் – 10,
கடலைமாவு – 150 கிராம்,
அரிசி மாவு – 50 கிராம்,
ஓமம் – கால் சிட்டிகை,
உப்பு – தேவையான அளவு,
மிளகாய்த் தூள் – ஒரு தேக்கரண்டி ,
சீஸ் ஸ்லைஸ் – 4 ,
பொடித்த கார்ன்ஸ்ஃப்ளேக்ஸ் – 50 கிராம்,
பெருங்காயத்தூள் – 1 சிட்டிகை,
எண்ணெய் – தேவையான அளவு.

செய்முறை

ஒரு பாத்திரத்தல் கடலை மாவு, அரிசி மாவுடன் மிளகாய்த் தூள், உப்பு சேர்த்து தேவையான அளவு தண்ணீர் தெளித்து கெட்டியாகப் பிசைந்துகொள்ளவும்.

பஜ்ஜி மிளகாயை நடுவில் கீறி, விதையை நீக்கிவிட்டு, சீஸை உள்ளே வைத்து மூடவும்.

கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் பிசைந்து வைத்திருக்கும் மாவில் பஜ்ஜி போல தோய்த்து பொடித்த கார்ன்ஸ்ஃப்ளேக்சில் தேய்த்து எண்ணெயில் போட்டு பொரித்து எடுக்க வேண்டும்.

சூப்பரான சீஸ் மிளகாய் பஜ்ஜி ரெடி.
SHARE