காலி- கராப்பிட்டிய பகுதியில் புற்று நோய் வைத்தியசாலை அமைப்பதற்காக நாடு தழுவிய ரீதியில் நிதி சேகரிக்கும் நடைபயணம் கடந்த 5ம் திகதி யாழ்ப்பாணம் பருத்தித்துறை பகுதியில் வடக்கு மாகாண முதலமைச்சர் சீ.வீ விக்னேஸ்வரன் தலைமையில் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.
இந்த நடைபவனியில் முன்னால் கிரிக்கெட் வீரர் மஹேல ஜெவர்தன கலந்து கொண்டுள்ளார்.
ஐந்தாம் நாளான இன்று (10) காலை கிளிநொச்சி ஐயக்கச்சியில் இருந்து ஆரம்பிக்கப்பட்ட இந்த நடை பயணம் ஏ-9 வீதியூடாக இயக்கச்சி, ஆனையிறவு, பரந்தன், கிளிநொச்சி நகா் ஊடாக இரணைமடு சந்தியை வந்தடைந்துள்ளார்கள்.
கடந்த 2011 ஆம் ஆண்டு தெய்வேந்திர முனையிலிருந்து பருத்தித்துறை முனை வரை மேற்கொள்ளப்பட்ட றெயில் நடைபவனியில் சேகரிக்கப்பட்ட நிதியில் யாழ். தெல்லிப்பளையில் புற்றுநோய் வைத்தியசாலை அமைக்கப்பட்டு தற்போது செயற்பட்டு வருகின்றமை எல்லோரும் அறிந்த விடயமாகும்.
இதன் அடுத்த கட்டமாக தெற்கே கராப்பிட்டியவில் அமைக்கப்படவுள்ள புற்றுநோய் வைத்திய சிகிச்சைப் பிரிவிற்கு நிதிப்பங்களிப்பை வழங்கும் நோக்கில் நடைபவனி ஏற்பாடாகியுள்ளது.
ஐந்தாம் நாளான இன்று (ஞாயிற்றுக்கிழமை) கிளிநொச்சி இயக்கச்சி சந்தியிலிருந்து ஆரம்பமாகிய நடைபயணம் கிளிநொச்சியை வந்தடைந்தது.
கராப்பிட்டியவில் அமைக்கப்படவுள்ள புற்றுநோய் வைத்திய சிகிச்சைப் பிரிவிற்கு நிதிப்பங்களிப்பை வழங்கும் நோக்கில் சென்றுகொண்டிருக்கும் றெயில் நடைபவனிக்கு சிறியவா்கள் முதல் பெரியவா்கள் என உதவிகளை வழங்கியமைகுறிப்பிடத்தக்க விடையமாகும்.