சுகாதாரம் தொடர்பில் பிரான்சின் புதிய முடிவு..!!

264

மக்கள் எளிதாக நோய்களுக்கு சிகிச்சை பெற்றுகொள்ளும் வகையில் மருத்துவர்கள் மற்றும் சுகாதார மையங்களின் எண்ணிக்கையை அதிகரிக்க பிரான்ஸ் அரசு முடிவு செய்துள்ளது.

பிரான்ஸ் அரசு சுகாதாரம் தொடர்பான ஒரு திட்ட அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில், நாட்டில் உள்ள மருத்துவர்களின் பற்றாக்குறைகளை போக்குவது குறித்து கூறப்பட்டுள்ளது.

அதாவது, சுகாதார மையங்களை அதிகப்படுத்துவது, போன் மற்றும் ஓன்லைன் மூலமாக நோயாளிகள் மருத்துவர்களை தொடர்பு கொண்டு ஆலோசனை பெறும் வசதியை மேம்படுத்துவது போன்ற விடயங்களை செய்யவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே பிரான்ஸின் எந்த பகுதிகளில் மருத்துவர்கள் அதிகமாகவும், பற்றாக்குறையாகவும் உள்ளார்கள் என medical authority Ordre National des Medecins கவுன்சில் ஆய்வு நடத்தியது.

ஆய்வின் முடிவில் Brittany, Corsica, ays de la Loire, Centre-Val de Loire, Nord-Pas-de-Calais மற்றும் Picardie-ல் மருத்துவர்கள் பற்றாக்குறை அதிகமாக உள்ளது தெரியவந்துள்ளது.

இங்கு 100,000 பேருக்கு வெறும் 290 மருத்துவர்களே உள்ளனர்.

தெற்கு பிரான்ஸின் Provence-Alpes-cote d’Azur பகுதியில் அதிகபட்சமாக 100,000 பேருக்கு 450 மருத்துவர்கள் உள்ளார்கள்.

quitaine, Limousin, Poitou-Charentes, Bourgogne, Franche-Comte மற்றும் l’Ile-de-France பகுதிகளில் மிக அதிகமாகவும் இல்லாமல், மிக குறைவாகவும் இல்லாமல் 100,000 பேருக்கு 390 மருத்துவர்கள் இருப்பது ஆய்வில் தெரியவந்துள்ளது.

SHARE