குழந்தைகளுக்கு பொதுவாக சொக்லெட் என்றால் மிகவும் பிடிக்கும். அதுவும் சொக்லெட் கேக் என்றால் சொல்லவே தேவையில்லை.
தற்போது 5 நிமிடத்தில் சாக்லெட் கேக் செய்வது எப்படி என்பதை பார்ப்போம்.
தேவையான பொருட்கள்
கேக் மாவு – ஒரு கப்
வெள்ளை சர்க்கரை – 4 டேபிள் ஸ்பூன்
கொக்கோ – 2 டேபிள் ஸ்பூன்
முட்டை – 1
பால் – 3 டேபிள் ஸ்பூன்
எண்ணெய் – 3 டேபிள் ஸ்பூன்
செய்முறை
ஒரு கப் கேக் மாவு, சர்க்கரை, கொக்கோ, முட்டை, பால், எண்ணெய் இது எல்லாவற்றையும் நன்றாக கலந்து கொள்ள வேண்டும்.
பின் Microwaveல் 3 நிமிடத்திற்கு வைக்க வேண்டும்.
பின் இறக்கி வைத்து பரிமாறினால் சுவையான சொக்லெட் கேக் ரெடி.