‘சுதந்திரக் கட்சி உங்கள் தந்தையின் சொத்து அல்ல’ என நாமலிடம் கூறிய டிலான் பெரேரா

292

‘ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உங்கள் தந்தையின் சொத்து கிடையாது’ என பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸவிடம், ராஜாங்க அமைச்சர் டிலான் பெரேரா தெரிவித்துள்ளார்.கட்சி தொடர்பில் தமக்கு விரும்பிய கருத்துக்களை வெளியிடக் கூடாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
கட்சி நேசிப்பர்கள் கூட்டு எதிர்க்கட்சியில் இணைந்து கொண்டதாகவும் எதிரானவர்கள் ஆளும் கூட்டணியில் இணைந்து கொண்டுள்ளதாகவும் நாமல் ராஜபக்ஸ அண்மையில் வெளியிட்ட கருத்து தொடர்பில் ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
தந்தை ஜனாதிபதியாக இருந்த காலத்தில் வெளியிட்ட கருத்துக்களை தற்போது நாமல் ராஜபக்ஸ வெளியிடக் கூடாது என அவர் தெரிவித்துள்ளார்.
நாமல் ராஜபக்ஸ சிறந்த அரசியல் குடும்பப் பினனணியைக் கொண்டிருப்பதாகவும் கட்சியின் மத்திய செயற்குழுவிற்கு சவால் விடுக்கும் வகையிலான கருத்து வெளியிடுவது அவரதுஅரசியல் எதிர்காலத்தையே பாதிக்கக் கூடும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்

SHARE