எதிர்வரும் பொதுத்தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திரக்கூட்டமைப்பின் வெற்றி குறித்து, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கலந்துரையாடியுள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது.
ஐக்கிய மக்கள் சுதந்திரக்கூட்டமைப்பின் செயலாளர் சுசில் பிரேம்ஜயந்த, ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் செயலாளர் அனுர பிரியதர்சன யாப்பா ஆகியோருடன் இந்தக்கலந்துரையாடல் இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில் கூட்டமைப்பு தோல்வி கண்டால் சுசில் பிரேமஜயந்தவை எதிர்க்கட்சி தலைவராக நியமிக்கவும் உடன்பாடு காணப்பட்டுள்ளது.
ஐக்கிய மக்கள் சுதந்திரக்கூட்டமைப்பு வெற்றிப்பெற்றால் மஹிந்தவை காட்டிலும் பிரதமராக நியமிக்க பல சிரேஸ்ட உறுப்பினர்கள் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியில் உள்ளனர் என்று ஜனாதிபதி கடந்த வாரங்களில் கூறியிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.