சுதந்திர கட்சியின் பிரதமர் வேட்பாளராக சந்திரிக்காவை களமிறக்க முயற்சி

327
எதிர்வரும் பொதுத் தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பிரதமர் வேட்பாளராக முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்கவை பெயரிடுவதற்கு கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்கள் கலந்துரையாடல்களை ஆரம்பித்துள்ளனர்.

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியில் பிரதமர் வேட்பாளராக போட்டியிட மஹிந்த ராஜபக்சவுக்கு சந்தர்ப்பம் கிடைக்காத பட்சத்தில், அவர் வேறு கூட்டணியின் ஊடாக தேர்தலில் களமிறங்கினால் அவருக்கு போட்டியாக களமிறங்க கூடிய ஒருவர் சந்திரிக்கா குமாரதுங்க என அடையாளப்படுத்தப்பட்டுள்ளது. கடந்த அரசாங்கத்தின் சிரேஷ்ட உறுப்பினர்களில் அதிகமானோர் அடங்கிய குழுவினரின் கலந்துரையாடலின் போது இந்த விடயம் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் நிறுவனரான பண்டாரநாயக்கவின் இரத்த உறவான சந்திரிக்கா சுதந்திர கட்சிக்கு மக்கள் ஆதரவை பெற்றுக்கொடுப்பார்.

மேலும் இவ் யோசனைக்கு சந்திரிக்கா குமாரதுங்க ஒரு போதும் மறுப்பு தெரிவிக்கமாட்டார் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்காவுடன் இது தொடர்பில் கலந்துரையாடுவதற்கும் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

SHARE