சுதந்திர தினத்தை முன்னிட்டு ஜனாதிபதியின் பொது மன்னிப்பின் அடிப்படையில் கைதிகளை விடுதலை செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய உத்தேசிக்கப்பட்டுள்ள சில கைதிகளை விடுதலை செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் நிஷாந்த தனசிங்க தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதியின் பொது மன்னிப்பு தொடர்பில் எழுத்து மூலம் அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் சிறைச்சாலைகள் ஆணையாளர் குறிப்பிட்டுள்ளார்.
விடுதலை செய்யக்கூடிய கைதிகளின் பெயர் பட்டியல் நாட்டிலுள்ள அனைத்து சிறைச்சாலைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் ஆணையாளர் நாயகம் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.