சுத்தமான குடிதண்ணீர் கேட்டு நல்லூரில் உண்ணாவிரதம்: போத்தல் தண்ணீர் அருந்த சொன்ன வடக்கு அதிகாரிகள்! – போராட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்கள் ஆத்திரமடைந்து கூச்சலிட்டுள்ளனர். அதனையடுத்து முதலமைச்சர் அடங்கிய குழுவினர் அவ்விடத்தைவிட்டு அகன்று சென்றனர்

390

யாழ்ப்பாணத்தில் சுத்தமான குடிதண்ணீரை உறுதிப்படுத்தக் கோரியும், அடுத்த 78 மணித்தியாலயங்களுக்குள் தமக்கு தீர்வு அறிவிக்க வேண்டும் என்று வலியுறுத்தியும் யாழ். நல்லூர் ஆலய பகுதியில் உண்ணாவிரதப் போராட்டம் ஒன்று இன்று முற்பகல் ஆரம்பிக்கப்பட்டிருந்தது. விதைக் குழுமம், தூயநீருக்கான பாதிக்கப்பட்ட மக்கள் ஒன்றியம், சுற்றுச்சூழல் அமையம் ஆகிய அமைப்புக்களின் ஏற்பாட்டில் இந்தப் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டது. இந்த நிலையில் இன்று இரவு முதலமைச்சர் அடங்கிய வடக்கு மாகாண உறுப்பினர்கள் உண்ணாவிரதம் போராட்டத்தில் ஈடுபட்டவர்களைச் சந்தித்துக் கலந்துரையாடினர்.

cm fffgg656551 (1)

இதன்போது எதிர்வரும் 12 ஆம் திகதிவரை பொறுத்திருக்குமாறும், அதன்பின்னர் தாம் பதில் தருவர் எனவும் வடக்குமாகாண முதலமைச்சர் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்களைக் கேட்டுக்கொண்டார். அதுவரை பொறுத்திருக்கமுடியாது என்று குறிப்பிட்ட போராட்டக்காரர்கள், சுன்னாகம் பகுதிகளில் ஓயில் கலந்த தண்ணீரில் பாதிப்பு இல்லை என்றால் அதைப் பருகலாமா, இல்லையா? என்று எழுத்து மூலம் தமக்கு பதில் தரவேண்டும் என்றும் கோரினர். அதற்கும் 12ஆம் திகதிவரை அவகாசம் கேட்ட முதலமைச்சர், அமைச்சர்கள், வடக்கு மாகாண சபை உறுப்பினர்களிடம், “அதுவரை நாம் எந்தத் தண்ணீரைக் பருகுவது?” என்று கேட்டுள்ளனர். இதன்போது அங்கு நின்றவர்களில் யாரோ “போத்தல் தண்ணீரை குடியுங்கள்” என்று குறிப்பிட்டாராம்.

இதைக் கேட்டதும் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்கள் ஆத்திரமடைந்து கூச்சலிட்டுள்ளனர். அதனையடுத்து முதலமைச்சர் அடங்கிய குழுவினர் அவ்விடத்தைவிட்டு அகன்று சென்றனர் என்றும், போராட்டம் தொடர்கிறது என்றும் தெரிவிக்கப்பட்டது

SHARE