ஹம்பாந்தோட்டை கொன்னோருவ பிரதேசத்தில் பொதுமக்களின் இந்த சாலை மறியல் தற்போது நடைபெற்று வருகின்றது.
இதில் அயல் பிரதேசங்களைச் சேர்ந்த ஐந்து கிராமங்களின் பொதுமக்களும் கலந்து கொண்டுள்ளதால், கொன்னொருவ ஊடான வீதிப்போக்குவரத்து முற்றிலுமாக துண்டிக்கப்பட்டுள்ளது.
அப்பிரதேச மக்களுக்கு பந்தகிரிய குளத்திலிருந்து எடுக்கப்படும் நீரைச் சுத்திகரித்து குடிநீர் வழங்கப்பட்டு வருகின்றது. எனினும் அதனை அருந்திய பொதுமக்களில் பலர் பல்வேறு வியாதிகளுக்கு உள்ளாகியிருப்பதாக தெரிய வந்துள்ளது.
இதன் காரணமாகவே அங்குள்ள பொதுமக்கள் தமக்கு சுத்தமான குடிநீர் வழங்குமாறு கோரி இன்று சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர்.
ஹம்பாந்தோட்டைப் பொலிசார் சம்பவ இடத்துக்கு வந்து சமாதானப் பேச்சுவார்த்தைளில் ஈடுபட்டுள்ள போதிலும், தமது பிரச்சினைக்கு உறுதியான தீர்வு கிடைக்கும் வரை சாலை மறியலைக் கைவிடப் போவதில்லை என்று பொதுமக்கள் உறுதியாகத் தெரிவித்துள்ளனர்.