சன் டிவியில் ஒளிபரப்பாகி நல்ல ஹிட் ஆன சீரியல் சுந்தரி. அதில் ஹீரோவின் நண்பன் ரோலில் நடித்து பாப்புலர் ஆனவர் அரவிஷ்.
முதல் பாகம் முடிவடைந்த நிலையில் தற்போது இரண்டாம் பாகம் ஒளிபரப்பாகி வருகிறது. அதிலும் அரவிஷ் ஒரு முக்கிய ரோலில் நடித்து வருகிறார்.
நிச்சயதார்த்தம்
அரவிஷ் தற்போது ஹரிகா என்ற நடிகையை காதலித்து வருகிறார். திருமகள் என்ற தொடரில் ஹீரோயினாக நடிப்பவர் தான் ஹரிகா.
அவர்கள் நிச்சயதார்த்தம் விரைவில் நடைபெற இருக்கிறது. அதை அவர்களே அறிவித்து இருக்கின்றனர். தற்போது அரவிஷ் – ஹரிகா ஜோடிக்கு வாழ்த்து குவிந்து வருகிறது.