சுனாமி ஒத்திகை ;பொது மக்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லை

128

தேசிய ரீதியிலான சுனாமி அனர்த்த ஒத்திகை நிகழாவு அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் வழிகாட்டலில் இன்று புதன்கிழமை இடம்பெறவுள்ளது.

இதற்கிணங்க இலங்கையின் கரையோர மாவட்டங்களில் அமைக்கப்பட்டுள்ள அனைத்து எச்சரிக்கை கோபுரங்களும் ஒரே நேரத்தில் காலை 8.30 மணியளவில் இயங்கவுள்ளன.

அதன்படி யாழ்.மாவட்டத்தின் சுனாமிக்கான எச்சரிக்கை கோபுரங்கள் அமைந்துள்ள நெடுந்தீவு மத்தி, வல்வெட்டித்துறை, வடமேற்கு, பருத்தித்துறை, மணற்காடு, உடுத்துறை ஆகிய கிராம சேவையாளர் பிரிவுகளில் இச் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படவுள்ளது.

அத்துடன் இந்த ஒத்திகை நடவடிக்கையானது இலங்கை மாத்திரமன்றி அவுஸ்திரேலியா, இந்தோனேஷியா மற்றும் இந்தியா போன்ற நாடுகளில் இன்று ஒரே நேரத்தில் இடம்பெறவுள்ளது.

ஆகவே இது தொடர்பில் பொது மக்கள் அமைதியாக இருக்குமாறும் இது ஒத்திகைச் செயற்பாடு என்பதனால் எவரும் குழப்பமடையத் தேவையில்லை எனவும் அனர்த்த முகாமைத்துவ அமைச்சு கேட்டுக் கொண்டுள்ளது.

SHARE