உலகின் சுபீட்சமான நாடுகளின் வரிசையில் இலங்கை 61ம் இடத்தை வகிப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.
லண்டனை மையமாகக் கொண்டு இயங்கி வரும் லெகாடும் நிறுவனத்தினால் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் மூலம் இந்த தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன.
மக்களின் நல்வாழ்வு மற்றும் செல்வம் ஆகியவற்றின் அடிப்படையில் இந்த ஆய்வு நடத்தப்பட்டுள்ளது.
142 நாடுகளிடம் இந்த ஆய்வு நடத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
பொருளாதாரம், முயற்சியான்மை, சந்தர்ப்பம், ஆட்சி, கல்வி, சுகாதாரம், பாதுகாப்பு, தனிப்பட்ட சுதந்திரம் மற்றும் சமூக மூலதனம் போன்ற விடயங்கள் குறித்து ஆய்வின் போது கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
உலகின் மிகவும் சுபீட்சமான நாடுகளின் வரிசையில் தொடர்ந்தும் நோர்வே முதனிலை வகிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.