சுமந்திரனின் தாயாருக்கு சம்பந்தன் மற்றும் மாவை இரங்கல்

88

 

நாடாளுமன்ற உறுப்பினரான எம்.ஏ.சுமந்திரனின் தாயார் கொழும்பில் காலமாகியுள்ள நிலையில் அவருக்கு தமிழரசுக்கட்சியின் முன்னாள் மூத்த நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சம்பந்தன் மற்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா ஆகியோர் அஞ்சலி செலுத்தியுள்ளனர்.

கொழும்பு – தெஹிவளையில் அமைந்துள்ள தனது மகளின் இல்லத்தில் நேற்று முன்தினம் (27.02.2024) சுமந்திரனின் தாயாரான 85 வயதுடைய புஷ்பராணி மதியாபரணன் காலமானார்.

மாவை அஞ்சலி
இந்நிலையில், தெஹிவளையில் அமைந்துள்ள சுமந்திரனின் வீட்டிற்கு இன்று(29) சென்ற தமிழரசுக்கட்சியின் முன்னாள் மூத்த நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சம்பந்தன் மற்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா, சுமந்திரனின் தாயாருக்கு அஞ்சலி செலுத்தியுள்ளனர்.

மேலும் சுமந்திரனின் தாயாரின் மறைவுக்கு பல்வேறு தரப்பினரும் தமது இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர்.

SHARE