வணக்கம்
இங்கே ஒரு தவறான கருத்தை ஒருசில ஈழத்தில் இருந்து வரும் அரசியல்வாதிகள் பதிய முற்ப்படுகின்றனர் அதாவது இவரை இனத்துரோகி என்று ஒரு தமிழ் குடிமகன் கூறியபோது இவர் கூறிய பதில் அதை மக்கள் சொல்லட்டும் என்று
இதை சற்று தெளிவாக்க நான் விரும்புகின்றேன் தம்பி சுமந்திரன் உங்களின் கருத்தின்படி தமிழ் சமுகத்தில் இருந்து யாராவது கேள்வி எழுப்பினாலோ அல்லது எதிர்ப்பு தெரிவித்தாலோ சிங்களத்தின் பாணியிலே இவர்கள் புலிகள் என்பதுபோல் பொருள்படுகின்றது
தம்பி சுமேந்திரன் நாங்கள் எங்கள் ஆயுதப்போராட்டத்தை முள்ளிவாய்க்காலில் 2009 /5/17 அன்று நிறுத்தி வைத்தோம் அதுமட்டும் இல்லை சிங்களவன் கொடூரமானவன் என்று தெரிந்தும் எங்கள் போராளிகள் ஆயுதங்களை மவுனித்து சரணடைந்தனர்
ஆனால் இப்பொது மக்கள் போராடுகின்றனர் நீங்கள் மக்களின் உணர்வுக்கு மதிப்பளிக்காமல் அவர்கள் மீது சிங்களவன்போல் புலி முத்திரை குத்த எண்ணுகின்றீர்கள் அவர்கள் யார் தமிழர் தமிழன் யார் புலிகள் இது இரண்டறக் கலந்துவிட்டது இதை வைத்து போராடும் உணர்வாலருக்கு முத்திரை குத்தும் அளவுக்கு தாங்கள் கொழும்பில் இருந்து வாழ்ந்த குடிமகன்
கடந்த காலத்தில் தமிழ் இனத்தின் துயரில் சம்பந்தம் இல்லாத தாங்கள் அடாவடி அரசியல் செய்ய புலிகளை சாட எண்ணுவது தமிழ் இனத்துக்கு தங்கள் மீது ஆத்திரம் வர காரணம் எனலாம் சரி ஏதேனும் தமிழ் சமுகத்துக்கு நல்லது செய்ய எண்ணினால் மக்கள் என்ன கூறுகின்றனர் என்பதை சற்று கேட்க்கவும்
அதே நேரம் புலம் பெயர் என் தமிழ் ஈழ உறவுகளே இப்போது ஒரு சதி அரசியல் நடத்தப்பட்டு வருகின்றது அதாவது சுமேந்திரன் போன்றவர்களை வைத்து சிங்கள அரசு வேலைத்திட்டம் கொடுக்கப்பட்டுள்ளது அதாவது இவர்கள் வருவார்களாம் மக்கள் ஆர்ப்பாட்டம் செய்வினையாம் அப்போது
ஒரு விஷமப்பிரச்சாரத்தில் இறங்கி இவர்கள் புலி ஆதரவாளர்கள் தங்களை பேச விடமாட்டினம் இவர்களுக்கு கருத்து கூற அனுமதி தரமாட்டினம் புலிகள் என்றால் இப்படித்தான் என்று ஒரு பொய்யான தோற்றத்தை உருவாக்கி போராடும் உணர்வாளரை திசை திருப்பும் ஒரு பெரும் சாதியின் வடிவமே
எனவே இப்படிப்பட்டவர்களின் கருத்தை காதில் வாங்காமல் செல்வது இன்றைய சூழ்நிலையில் சாலப்பொருந்தும் சும்மாய் நீங்கள் தலைவர் வருவார் அப்போ பதில் கூற வேண்டி வரும் என்றெல்லாம் ஒரு சில உறவுகள் தங்கள் வேதனையை கொட்டித்தீர்த்தனர்
ஆனால் தலைவரினதும் புலிகளினதும் தலையில் எத்தனை நாளைக்கி பாரத்தை கொடுத்து சுமக்க சொல்வீர்கள் இனி எதுவந்தாலும் அரசியல் வடிவத்தில் நீங்கள்தான் போராட வேண்டும் தயவு செய்து எங்களின் தலையில் மீண்டும் பாரத்தை தந்து நீங்கள் சும்மாய் இருக்காதீர்கள்
சுமேந்திரனும் ஒரு தமிழர்தான் ஆனால் அவர் தப்பு செய்தால் அதை வெளிக்கொண்டு வரும் முறைகளில் மாற்றம் வேண்டும் நான் ஒரு முன்னாள் புலி போராளி ஆனால் நாம் மாற்றுக்கருத்துள்ளவர்களுக்கு எதிரானவர்கள் என்று விசமப்பிரச்சாரத்தை சிங்களத்தோடு இணைந்து பல தமிழ் குழுக்கள் கொழும்பிலே கூதல் காய்ந்தபோதே தமிழ் தேசியக் கூட்டமாய் உருவாக்கினோம்
அதே நேரம் மாற்றுக்கருத்து என்று கூறி மாற்றான் மாட்டுக்கருத்தை கொண்டுவந்து தமிழ் இனத்துக்கு திரோகம் இளைக்க முயன்றவர்கள் மீது நடவடிக்கை எடுத்தோம் எதிர்த்தோம் குழும்பில் இருந்து அரசியல் நத்தியவர்களுக்கு குக்கிராமத்தின் வலி எப்படி புரியும்
எனவே சற்று தெளிவாக இருக்கவும் சுமேந்திரன் நான் சொன்னதை மட்டுமே கேளுங்கள் என்று மாற்றுக்கருத்துக்கு இடம் கொடுக்காமல் தங்கள் சொந்தக்கருத்தை தமிழ் ஈழ மக்களிடம் திணிக்க முயல்வதை அவருடைய பாணியிலே சென்று எடுத்துரைக்க வேண்டும்
இன்னும் ஒருமுறை கூறுகின்றேன் நான் ஒரு முன்னாள் விடுதலைப்புலி போராளி நாம் போராடும் பொது முள்ளின் மேல் நடபதுபோல் இருக்க வேண்டும் கொஞ்சம் அசைந்தாலும் முள் நன்றாகவே எம்மை பதம் பாத்துவிடும்
நன்றி