சுற்றாடல் அழிப்புக்கெதிராக அரசாங்கம் கடுமையான நிலைப்பாடு – ஜனாதிபதி

251

சுற்றாடல் அழிவுடன் ஏற்படும் அனர்த்தத்துக்கு இன்று எமது நாடு மட்டுமன்றி முழு உலகமும் முகங்கொடுக்க வேண்டியுள்ளதாக சுட்டிக்காட்டிய ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்கள் சுற்றாடல் அழிப்புக்கெதிராக தற்போதய அரசாங்கம் கடுமையான கொள்கையை கடைப்பிடிப்பதாக தெரிவித்தார்.

ஸ்ரீ லங்கா நெக்ஸ்ற் – நீலப் பசுமை யுகம்' எனும் எண்ணக்கருவை மக்களிடம் கொண்டு செல்வது தொடர்பான பிரதான நிகழ்வு இன்று (18) முற்பகல் பண்டாரநாயக்கா ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றபோதே கௌரவ ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார்.

ஏந்தவொரு நிறுவனமோ நபரோ சுற்றாடலை அழிக்கும் வகையில் செயற்பட்டால் அவர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க பின்னிற்கப் போவதில்லை என்று குறிப்பிட்ட அவர் கடந்த சில நாட்களில் நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் அறிவிக்கப்பட்டுள்ள சம்பவங்கள் தொடர்பில் சுற்றாடல் அமைச்சர் எனும் வகையில் தான் கடும் நடவடிக்கை எடுக்கவிருப்பதாகவும் தெரிவித்தார்.

சுற்றாடல் பாதுகாப்பு தொடர்பில் செயற்படும் அரச நிறுவனங்கள் மற்றும் அலுவலர்கள் இது தொடர்பில் மிகவும் பொறுப்புடன் செயற்படவேண்டுமென தெரிவித்த ஜனாதிபதி நாடு, நாட்டுமக்கள் பற்றிச் சிந்திக்காமல் பணத்துக்குப் பின்னால் செல்லும் கள்ளக் கடத்தல்காரர்களுக்கு எதிராக அந்த அலுவலர்கள் நேர்மையாக தமது பொறுப்பினை நிறைவேற்றுவார்களென எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்தார்.

2017 ஆண்டு நாட்டை வறுமையிலிருந்து விடுவிக்கும் ஆண்டாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. ஆற்கான அனைத்து செயற்பாடுகளும் நிலைபேறான அபிவிருத்திக்கு முன்னுரிமை வழங்கியே மேற்கொள்ளப்படுவதாக தெரிவித்த ஜனாதிபதி முழு மனித குலத்தினதும் இயற்கையினதும் இருப்புக்காக நிலைபேறான அபிருத்திக்கு முன்னுரிமையளித்து செயற்படுவது அரசாங்கத்தின் பிரதான குறிக்கோளாகுமென்றும் வலுசக்தி தொடர்பாகவுள்ள பிரச்சனைகளை தீர்த்து முன்நோக்கிப் பயணிக்கும் போது இயற்கை வளங்களுடன் இணையவேண்டியதன் முக்கியத்துவத்தை அரசு இனங்கண்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

இலங்கை நீலப் பசுமை யுகத்தை நோக்கிப் பயணித்தல் எண்ணக்கருவை மக்களிடம் கொண்டு செல்லும் நோக்குடனான பல நிகழ்ச்சிகள் 17,18,19 ஆகிய நாட்களில் பண்டாரநாயக்கா ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெறுகிறது. அத்துடன் ஐந்தாவது ஆசிய பசுபிக் பிராந்திய காலநிலை மாற்றத்துக்கு இயைபாக்கமடைதல் மாநாடு ஐந்நூறு வெளிநாட்டு விஞ்ஞானிகளின் பங்குபற்றுதலுடன் நேற்று ஆரம்பமானது.

சர்வதேச ஆராய்ச்சி மாநாடு, சுற்றாடல் திரைப்பட காட்சி, சுற்றாடல் ஆக்கத்திறன் மற்றும் சுற்றாடல் கண்டுபிடிப்பு கண்காட்சி, நிபுணத்துவ கலந்துரையாடல், காலநிலை மாற்றம் தொடர்பான பூகோள இளைஞர் கருத்தாடல், சுற்றாடல் ஆராய்ச்சி மாநாடு போன்ற நிகழ்வுகளும் இடம்பெறுகின்றன.

இன்று நடைபெற்ற பிரதான நிகழ்வில் 80 க்கு மேற்பட்ட ஜனாதிபதி சுற்றாடல் விருது மற்றும் பசுமை விருதுகளும் வழங்கிவைக்கப்பட்டன.

பசுமை காலநிலை நிதியத்திடமிருந்து இலங்கைக்கு 38.18 மில்லியன் அமெரிக்க டொலர்கள் அன்பளிப்பாக வழங்கிவைக்கப்பட்டதோடு ஐநா வதிவிட ஒருங்கிணைப்பாளர் Una McCauley அவர்களினால் இதற்கான காசோலை வழங்கி வைக்கப்பட்டது. மகாவலி அபிவிருத்தி மற்றும் சுற்றாடல் அமைச்சின் செயலாளர் உதய ஆர் செனிவிரத்ன இந்த நிகழ்வில் பங்குபற்றினார்.

மகாவலி அபிவிருத்தி மற்றும் சுற்றாடல் அமைச்சின் காலநிலை மாற்றம் தொடர்பான செயலகத்தினால் காலநிலை மாற்றம் தொடர்பாக தயாரிக்கப்பட்ட சஞ்சிகையின் முதலாவது இதழ் ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டது.

இந்நிகழ்வில் அமைச்சர்கள் மற்றும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட உள்நாட்டு வெளிநாட்டு சுற்றாடல்துறை நிபுணர்களும் கலந்துகொண்டனர்.

ஜனாதிபதி ஊடகப் பிரிவு

18.10.2016

z_fea800

SHARE