நாடு முழுவதும் நேற்றிரவு முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பில் 16 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
பண்டாரகமயில் ஒருவரும் திறப்பனயில் நால்வரும் வவுணதீவில் இருவரும் பாலாங்கொடயில் ஒருவரும் மாத்தறையில் ஒருவரும் மெகல்லாவயில் இருவரும் வத்தளையில் ஒருவரும் இறக்குவானை 3 பேரும் மற்றும் தெல்தெனியவில் ஒருவருமாக 16 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
மேலும் கைதுசெய்யப்பட்டவர்களிடம் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில் பண்டாரகமயில் வைத்து கைதுசெய்யப்பட்ட நபர் தீவிரவாத அமைப்பொன்றுடன் தொடர்புடையவரென பொலிஸாரால் சந்தேகிக்கப்படுகின்றது.
அத்துடன் திறப்பனைப் பகுதியில் வைத்து கைதுசெய்யப்பட்டவரிடம் ரிப்பிட்டர் மற்றும் 12 போர் துப்பாக்கிகளையும் பொலிஸார் மீட்டுள்ளனர்.
இதேவேளை, வத்தளைப் பகுதியில் வைத்து கைதுசெய்யப்பட்டவரிடம் 2 வோக்கிடோக்கிகளை பொலிஸார் கைப்பற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.