சுற்றுலாப் பயணிகளுக்கு சீகிரியாவிலிருந்து சூரியோதயக் காட்சியை ரசிக்கும் வாய்ப்பு

651
சர்வதேசப் புகழ்பெற்ற சீகிரியாக் குன்றின் உச்சியிலிருந்து சூரியோதயக் காட்சியை ரசிக்கும் வாய்ப்பு சுற்றுலாப் பயணிகளுக்கு கிட்டவுள்ளது.

எதிர்வரும் 27ம் திகதி உலக சுற்றுலா தினம் கொண்டாடப்படவுள்ளது. இதனை முன்னிட்டு இலங்கையின் சுற்றுலாத்துறையை அபிவிருத்தி செய்யும் நோக்கில் பல்வேறு புதிய செயற்திட்டங்களை சுற்றுலா அபிவிருத்திச் சபை முன்னெடுத்துள்ளது.

இதன் ஒருகட்டமாக சீகிரியா குன்றின் உச்சியிலிருந்து சூரியோதயத்தை ரசிக்கும் வாய்ப்பு சுற்றுலாப் பயணிகளுக்கு கிட்டவுள்ளது.

இது தொடர்பான சுற்றுலாப் பயணிகளின் பிரதிபலிப்பைப் பொறுத்து எதிர்வரும் காலத்தில் இந்த வாய்ப்பை தொடர்ச்சியாக வழங்குவது குறித்து சுற்றுலா அபிவிருத்திச் சபை கவனத்திற்கொள்ளவுள்ளது.

SHARE