சுற்றுலா பயணிகள் விசா இன்றி இலங்கைக்கு வரக்கூடிய கொள்கையை விரிவுபடுத்த இலங்கை அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சார்க் நாடுகளின் பயணிகள் மற்றும் சில தெரிவு செய்யப்பட்ட நாடுகளின் சுற்றுலா பயணிகளை ஊக்குவிக்கும் முயற்சியில் அரசாங்கம் ஈடுபட்டுள்ளது. இந்த கொள்கையை புதுப்பிக்க மறுபரிசீலனை செய்வதாக சுற்றுலாத்துறை அமைச்சர் ஜோன் அமரதுங்க தெரிவித்துள்ளார்.
இதற்கான பிரேரணை பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக ஜோன் அமரதுங்க குறிப்பிட்டுள்ளார்.
விசா இன்றி இலங்கை வருவதற்கு எந்த நாடுகளுக்கு வாய்ப்பு வழங்கலாம் என்பது குறித்து பிரதமர் ஆய்வு செய்து வருவதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
வியட்நாம் போன்ற சில பிராந்திய நாடுகளுடனான, இலங்கையின் இணக்கம் படிப்படியாக வீழ்ச்சியடைந்து வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
தற்போது சிங்கப்பூர், நேபாளம் மற்றும் மாலைதீவு ஆகிய நாடுகளில் இருந்து இலங்கை வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு on arrival விசா வழங்கப்படுகின்றது.
முன்னதாக, இலங்கை, பல நாடுகளுக்கு on arrival விசா வழங்கியது. எனினும், இந்த முடிவு எட்டு ஆண்டுகளுக்கு முன்பு நிறுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.