பிரான்சுக்கு சுற்றுலா வந்த எட்டு வயது சிறுமி கொடூரமாக பாலியல் வன்புணர்வுக்கு உள்ளாக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தெற்கு பிரான்சின் Ardeche பகுதியிலே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. அப்பகுதியின் Saint-Alban-Auriolles பகுதி பெருமளவான வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகளை கவரும் இடமாகும்.
இங்கு வருடத்துக்கு 2,70,000 வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகள் வருகை தருகின்றனர்.
டச்சு நாட்டைச் சேர்ந்த 8 வயது சிறுமி தனது பெற்றொருடன் Saint-Alban-Auriolles பகுதிக்கு சுற்றுலா சென்றுள்ளார். இரவு வேளையில் சிறுமிக்கு தனி கூடாரம் அமைத்து அதில் உறங்க வைத்திருக்கிறார்கள். அதன்போதே இச்சம்பவம் நடந்துள்ளது.
சம்பவம் குறித்து சிறுமியின் பெற்றோர் பொலிஸ் நிலையத்தில் புகார் தெரவித்துள்ளனர். இதை தொடர்ந்து குற்றவாளியை பிடிக்க பொலிசார் தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர்.
பாதிக்கப்பட்ட சிறுமிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது, சில வருடங்களுக்கு முன் இதே பகுதியில் கூடாரத்தில் தங்கும் பெண்களை, ஒருவன் தொடர் பாலியல் வன்புணர்வு செய்தான் என்பது நினைவுறத்தக்கது.
மேலும், குற்றவாளியை கைது செய்யும் வரை கூடாரத்தில் தங்குபவர்களை பாதுகாப்புடன் இருக்குமாறு பொலிசார் அறிவுறுத்தியுள்ளனர்.
தற்போது இடம்பெற்றுள்ள இச்சம்பவத்தின் மூலம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.