சுலைமான் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக கொழும்பிலிருந்து மாவனெல்லை வரை சீ.சீ.ரீ.வி கமராக்கள் சோதனை

233

பம்பலப்பிட்டி வர்த்தகர் மொஹமட் சுலைமான் கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக கொழும்பிலிருந்து மாவனெல்லை வரையான வீதிகளில் பொறுத்தப்பட்டுள்ள சீ.சீ.ரீ.வி கமராக்களை ஆராய்வதற்கு புலனாய்வு பிரிவினர் தீர்மானித்துள்ளனர்.

இதன்படி நேற்று முதல் அந்த நடவடிக்கையை ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஏற்கனவே பம்பலப்பிட்டி பகுதியிலுள்ள கமராக்களை சோதனையிட்ட அவர்கள் சந்தேகத்திற்கிடமான வாகனங்கள் தொடர்பாக ஆராய்ந்துள்ளனர். அத்துடன் அவர் மாவனல்லை வரை கடத்திச் செல்லப்பட்டிருந்தமையினால் அங்கு வரை வீதிகளில் குறித்த சந்தேகத்திற்கிடமான வாகனங்களின் பயண பாதையை கண்டுபிடிக்க நடவடிக்கையெடுத்துள்ளனர்.murder

SHARE