சுவாதியின் அப்பாவுக்கும் என்னை தெரியும்! மனம் திறந்த ராம்குமார்

216
625.256.560.350.160.300.053.800.461.160.90

படுகொலை செய்யப்பட்ட சுவாதி கொலை வழக்கு தொடர்பில் நாளுக்கு நாள் புதிய செய்திகள் வெளிவருகின்றனர். அதிலும் உண்மை எது? பொய் எது? என்பதை யூகிக்க முடியாத அளவுக்கு செய்திகள் வெளிவருகின்றன.

கடந்த மாதம் 24ஆம் திகதி சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் வைத்து பொறியியலாளர் சுவாதி கொலை செய்யப்பட்டார்.

இந்த கொலை வழக்கு தொடர்பில் செங்கோட்டை மீனாட்சிபுரம் பகுதியைச் சேர்ந்த ராம்குமார் என்பவரை கைது செய்துள்ள பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

தற்போது சென்னை மத்திய புழல் சிறையில் ராம்குமார் தடுத்து வைக்கப்பட்டுள்ள நிலையில் இன்று அடையாள அணிவகுப்பும் நடத்தப்பட்டது.

இதனையடுத்து தமிழ்நாடு முற்போக்கு சட்டத்தரணிகள் சங்கத்தை சேர்ந்த சட்டத்தரணிகள் ராம்குமாரை சந்தித்துப் பேசியிருந்தார்கள்.

சட்டத்தரணிகளுடன் பேசிய ராம்குமார் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார், ” நான் தங்கியிருந்த குடியிருப்புக்கு அருகிலேயே சுவாதியின் வீடும் இருந்தது.

அந்த வழியாக சுவாதி செல்லும்போது இயல்பாக எங்களுக்குள் அறிமுகம் ஏற்பட்டது. எனக்கு ஒரு நல்ல தோழியாகவே அவர் இருந்தார்.

தினமும் அந்த வழியாக செல்லும்போது இயல்பாக பார்த்து பேசிக்கொள்வது எங்களுக்குள் இருந்தது.

சம்பவம் நடந்த அன்று தான் எனது அறையில்தான் இருந்தேன். சுவாதியை நான் சந்திக்கவில்லை. சுவாதி கொலை செய்யப்பட்ட சம்பவத்தை கேள்விப்பட்டு மிகுந்த அதிர்ச்சியடைந்தேன்.

எப்போதும் ஊருக்கு செல்வதுபோல் அன்றும் எனது ஊருக்கு வந்து விட்டேன். இந்த கொலையில் எனக்கு எவ்வித தொடர்பும் இல்லை.

இந்த படுகொலை வழக்கில் பொலிஸார் என்னை சந்தேகித்து வருவார்கள் என நான் நினைக்கவில்லை. நான் வீட்டில் இருந்தபோது பொலிஸ் உடையிலும், சாதாரண உடையிலும் இருந்த 20 பேர் என்னை தாக்க வந்தார்கள்.

அடுத்த சில நிமிடங்களில் என்ன நடந்தது என்பது எனக்கு தெரியவில்லை. நான் கழுத்தை அறுத்துக்கொள்ள எந்த சூழ்நிலையிலும் முயற்சிக்கவில்லை.

அந்த நிமிடத்தில் என்ன நடந்தது என்பது குறித்து தெரியவில்லை. கண்விழித்தபோது வைத்தியசாலையில் இருந்தேன்.

இந்த வழக்கில் பொலிஸார் என்னை குற்றவாளியாக சேர்த்திருப்பது குறித்து மிகுந்த வேதனை அடைந்தேன். சுவாதியின் அப்பாவுக்கும் என்னை தெரியும்.

என்னை அவர் பார்த்திருக்கிறார். வேண்டுமென்றே இந்த வழக்கில் நான் சிக்க வைக்கப்பட்டிருக்கிறேன்” என கூறியதாக சட்டத்தரணிகள் தெரிவித்துள்ளனர்.

SHARE