சுவிட்சர்லாந்தில் இலங்கையர்கள் முதலிடம்!

204

சுவிட்சர்லாந்தில் கடந்த வருடம் அகதி அந்தஸ்து கோரியவர்களுள் இலங்கையர்களின் எண்ணிக்கையே அதிகம் என ரொய்ட்டர் செய்தி நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது. கடந்த ஆண்டு மட்டும் அகதி அந்தஸ்துக்காக விண்ணப்பித்த சுமார் 27,000க்கும் அதிகமானோரில் மூன்றில் ஒரு பங்கினர் இலங்கையர்களே என்று அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

எனினும், ஆசிய நாடுகள் மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் இருந்து சுவிட்சர்லாந்துக்குள் நுழையப் பயன்படுத்தப்பட்ட பால்கன் தரை மார்க்கத்தை கடந்த வருடம் சுவிட்சர்லாந்து அரசு மூடிவிட்டது.

இதனால், உள்நாட்டு யுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ள சிரியா, துருக்கி ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்களே இவ்வாண்டு பெருமளவில் அகதி அந்தஸ்து கோருவர் என எதிர்பார்க்கப்படுகிறது. இவர்கள் ஆபத்துக்கள் நிறைந்த மத்திய தரைக் கடல் வழியாக சுவிட்சர்லாந்துக்குள் நுழைவர் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த ஆண்டில் குறைந்தது 25 ஆயிரம் பேர் சுவிட்சர்லாந்தில் அகதி அந்தஸ்து கோரலாம் என எதிர்பார்க்கப்படும் நிலையில் சிரிய, துருக்கி அகதிகள் சுவிட்சர்லாந்தை நோக்கி வரத் தொடங்கும் பட்சத்தில் இந்த எண்ணிக்கை சுமார் 32 ஆயிரத்தை எட்டலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

SHARE