சுவிட்சர்லாந்தில் ரயிலில் சந்தேக நபரை பொதுமக்களின் உதவியுடன் பொலிசார் கைது

231

சுவிட்சர்லாந்தில் பாஸலில் இருந்து சூரிச் நகரத்திற்கு புறப்பட்டு சென்ற ரயிலில் சந்தேக நபரை பொதுமக்களின் உதவியுடன் பொலிசார் கைது செய்துள்ளனர்.

குறித்த கைது சம்பவத்தை ஆர்காவ் மண்டல பொலிசார் உறுதி செய்துள்ளனர்.

வியாழனன்று காலை பாஸல் நகரில் இருந்து சூரிச் நகரத்திற்கு புறப்பட்டு சென்ற ரயிலில் சந்தேக நபரை பயணிகள் பார்த்துள்ளனர்.

பிரான்ஸ் துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் தொடர்புடைய நபராக இருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில், துரிதமாக செயல்பட்ட பயணிகளில் ஒருவர் உடனடியாக பொலிசாருக்கு தகவல் அளித்துள்ளார்.

தகவல் அறிந்து விரைந்துவந்த பொலிசார் Frick நிறுத்தத்தில் வைத்து குறித்த நபரை பொலிசார் கைது செய்துள்ளனர்.

திடீரென்று ரயிலில் பொலிஸ் குவிக்கப்பட்டதால் பயணிகள் பலர் என்ன நடப்பது என அறியாமல் திகைத்துப் போயுள்ளனர்.

சிலர், இளைஞர் ஒருவரை பொலிசார் கைது செய்து அழைத்துச் சென்றுள்ளனர், என்ன சம்பவம் என தெரியாது என குறிப்பிட்டுள்ளனர்.

கைதான நபர் அரேபியர் போன்று இருந்ததாகவும், பை ஒன்றை வைத்திருந்ததாகவும் ரயில் பயணிகள் தெரிவித்துள்ளனர்.

குறித்த பொலிஸ் நடவடிக்கையால ரயில் 3 நிமிடம் தாமதமாக புறப்பட்டு சென்றதாக கூறப்படுகிறது.

இதனிடையே பொலிசார் மேற்கொண்ட விசாரணையில், கைதான நபர் அப்பாவி என தெரியவந்ததும் அவரை விடுவித்துள்ளனர்.

பிரான்ஸில் Strasbourg பகுதியில் கிறிஸ்துமஸ் சந்தையில் துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் தொடர்புடைய நபர் சுவிஸில் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட நபர் என்பதால் பொதுமக்களுக்கு இந்த குழப்பம் ஏற்பட்டுள்ளதாக பின்னர் தெரியவந்துள்ளது.

SHARE