சுவிட்சர்லாந்தில் வேளாண்மை மற்றும் உணவு பாதுகாப்பு, இறக்குமதியால் விவசாயிகள் பாதிக்கப்படாமல் இருத்தல் ஆகிய நோக்கங்களுக்காக நடத்தப்பட்ட வாக்கெடுப்புகள் தோல்வியில் முடிந்தன.
உள்ளூர் விவசாயத்தை ஊக்குவித்தல், உணவு தயாரிப்பில் தரக்கட்டுப்பாடுகளை மேம்படுத்துதல் ஆகியவற்றை மையமாகக் கொண்டு முன்வைக்கப்பட்ட திட்டங்களை வாக்காளர்கள் நிராகரித்துள்ளார்கள்.
‘Fair Food’ மற்றும் ‘Food Sovereignty’ என்னும் இரண்டு திட்டங்கள் உள்ளூர் விவசாயிகளால் முன்வைக்கப்பட்டன.
இதில் ‘Fair Food’திட்டத்திற்கு எதிராக 61 சதவிகிதம் பேரும்,‘Food Sovereignty’ திட்டத்திற்கு எதிராக 68 சதவிகிதம் பேரும் வாக்களித்துள்ளனர்.
சுவிட்சர்லாந்தின் வலிமையான விவசாயிகள் யூனியனால் ஆதரவளிக்கப்பட்ட ‘Food Sovereignty’ திட்டமானது, மரபணு மாற்ற பயிர்கள் நிரந்தரமாக தடை செய்யப்பட வேண்டும் என்பது உள்ளிட்ட முக்கிய விடயங்களை உள்ளடக்கியிருந்தது.
ஆரம்ப கட்ட வாக்கெடுப்புகள் இரண்டு திட்டங்களுக்கும் ஆதராவாக இருந்த நிலையில், அரசு, நாடாளுமன்றம் மற்றும் பல எதிர்ப்பாளர்கள் இத்திட்டங்களால் விலைவாசி
கடுமையாக உயரும் என்றும், தயாரிப்புகளை நுகர்வோர் தேர்வுசெய்தல்மட்டுப்படுத்தப்படும் என்றும் சுவிட்சர்லாந்தின் சர்வதேச வர்த்தக விதிகள்மீறப்படும் வாய்ப்புகள் உள்ளது எனவும் வாதிட்டதால் மக்களின் ஆதரவு சட்டெனக் குறைந்தது.
ஜெனீவா மற்றும் பிரெஞ்சு மொழி பேசும் பகுதிகள் இத்திட்டங்களுக்கு ஆதரவளித்த போதும், ஜேர்மன் மொழி பேசும் பகுதிகளைச் சேர்ந்த மக்கள் திரண்டு அவற்றிற்கெதிராக வாக்களித்தனர்.
இதனால் இரண்டு திட்டங்களும் தொடங்கும் முன்பே தோல்வியில் முடிந்துள்ளன.