சுவிட்சர்லாந்து ஏல நிறுவனம் ஒன்றில் ’புறாவின் ரத்தம்’ என்று அழைக்கப்படும் விலையுயர்ந்த மாணிக்க கல் ஒன்று இதுவரை இல்லாத விலையில் ஏலம் விடப்பட்டு உலக சாதனையை நிகழ்த்தியுள்ளது.

421
சுவிட்சர்லாந்து ஏல நிறுவனம் ஒன்றில் ’புறாவின் ரத்தம்’ என்று அழைக்கப்படும் விலையுயர்ந்த மாணிக்க கல் ஒன்று இதுவரை இல்லாத விலையில் ஏலம் விடப்பட்டு உலக சாதனையை நிகழ்த்தியுள்ளது.சுவிட்சர்லாந்தின் ஜெனிவா நகரில் உள்ள Sotheby’s என்ற நிறுவனத்தில் உலக நாடுகளிலிருந்து வரவழைக்கப்பட்ட விலையுயர்ந்த ஆபரணங்கள் கடந்த செவ்வாய் கிழமை ஏலத்தில் விடப்பட்டது.இந்த நிகழ்ச்சியில் ‘புறாவின் ரத்தம்’ என்று அழைக்கப்படும் 25.59 காரட் கொண்ட மாணிக்க கல்லை 30.33(3 கோடியே 33 லட்சம்) மில்லியன் டொலருக்கு பெயர் வெளியிடப்படாத நபர் ஒருவர் வாங்கியுள்ளார்.

இந்த வரலாற்று சாதனை குறித்து பேசிய Sotheby’s நிறுவன தலைவரான David Bennett, கடந்த 40 ஆண்டுகால வரலாற்றில் ’புறாவின் ரத்த’ நிறத்தில், மிகப்பெரிய அளவில் இது போன்ற ஒரு பிரமிக்க வைக்கும் மாணிக்க கல்லை பார்த்ததே இல்லை என்றார்.

மேலும், மாவீரன் நெப்போலியனின் மருமகளான இளவரசி Mathilde வைத்திருந்ததாக கூறப்படும் பிங்க் நிற வைரம் ஒன்று 15.9 மில்லியன் டொலருக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது.

இந்த வைரமும் அதிக விலைக்கு விற்பனையாகியுள்ளதாக Sotheby’s நிறுவனம் தெரிவித்துள்ளது.

இது தவிர, மியான்மரில் இருந்து கொண்டு வரப்பட்டுள்ள Sunrise என்ற மாணிக்கம் 12 மில்லியன் முதல் 18 மில்லியன் டொலருக்கு விற்பனையாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

SHARE