சுவிஸில் குடியேறிய ஜேர்மனியர்களின் வாழ்க்கை எப்படி உள்ளது?

221

சுவிற்சர்லாந்தில் குடியேறிய ஜேர்மனியர்களில் பெரும்பாலானோர் வேலை மற்றும் தனிப்பட்ட வாழ்க்கையில் மகிழ்ச்சியாக வாழ்கிறார்கள் என ஆய்வில் தெரியவந்துள்ளது.

சுவிற்சர்லாந்தில் 300,000 என்ற அளவில் ஜேர்மனியர்கள் வாழ்ந்து வருகிறார்கள், அவர்களின் வாழ்க்கை தரம் எப்படி உள்ளது என சுவிஸ் தேசிய அறிவியல் அறக்கட்டளை சமீபத்தில் ஆய்வு நடத்தியது.

இதில் பெரும்பாலானோர் வேலை மற்றும் தனிப்பட்ட வாழ்க்கை விடயத்தில் தாங்கள் மகிழ்ச்சியாக இருப்பதாக கூறியுள்ளனர்.

படிப்பு, வேலை, தொழில் போன்ற பல்வேறு காரணங்களுக்காக ஒரு மாதத்துக்கு சராசரியாக 1500 ஜேர்மனியர்கள் சுவிஸ்க்கு வருகிறார்கள் என தெரியவந்துள்ளது.

இதுகுறித்து ஆய்வாளர் Steiner கூறுகையில், இங்கு வாழும் ஜேர்மனியர்களுக்கு அவர்கள் செய்யும் தொழில், பணியில் கிடைக்கும் சம்பளம், உயர்மட்ட வாழ்க்கை, பொருளாதார ஸ்திரத்தன்மை என எல்லாமே நன்மை அளிப்பதாக உள்ளது.

அதே நேரத்தில் சமுதாயத்தில் சகிப்புத்தன்மை, கடினமான வீட்டு சந்தை மற்றும் வரையறுக்கப்பட்ட குழந்தைகள் பராமரிப்பு வசதிகள் போன்றவை பிரச்சனையாக உள்ளது என சுவிஸில் குடியேறிய ஜேர்மனியர்கள் கூறுகிறார்கள் என Steiner தெரிவித்துள்ளார்.

அதேபோல மூன்றில் ஒரு ஜேர்மனியர், தங்கள் நாட்டுக்கே திரும்ப போவது குறித்து யோசிக்கிறார்கள், பெரும்பாலான ஜேர்மனியர்கள் சுவிஸில் ஒருங்கிணைந்து வாழ வசதியாக உள்ளது என கூறியுள்ளனர்.

மேலும், சுவிஸை சேர்ந்தவர்கள் ஜேர்மனியர்களை கலப்பு திருமணம் செய்து கொள்வது 2014ல் 1,219 ஆக இருந்த நிலையில் 2016ல் அது 2,239 ஆக உயர்ந்துள்ளதும் ஆய்வில் தெரியவந்துள்ளது.

SHARE