சுவிஸில் சிறுமிகளிடம் அத்துமீறிய புலம்பெயர்ந்தவர் அதிரடி கைது.

298

625.117.560.350.160.300.053.800.210.160.90

சுவிட்சர்லாந்து நாட்டில் 4 சிறுமிகளிடம் அத்துமீறி நடந்துக்கொண்ட புலம்பெயர்ந்த நபர் ஒருவரை பொலிசார் அதிரடியாக கைது செய்துள்ளனர்.

ஆர்கவ் மாகாணத்தில் உள்ள Kaiseraugst என்ற நகரில் 37 வயதான நபர் ஒருவர் வசித்து வருகிறார். கடந்த செவ்வாய்க்கிழமை அன்று பள்ளி செல்லும் 12 முதல் 14 வயதுடைய சிறுமிகளை அவர் சாலையில் பின் தொடர்ந்து சென்றுள்ளார்.

அப்போது, சிறுமிகளை நோக்கி அவர் தகாத வார்த்தைகளை பயன்படுத்தியதாக கூறப்படுகிறது. மேலும், சிறுமிகளை பின் தொடர்ந்து சென்றபோது அவர்கள் ஒரு லிஃப்ட்டில் ஏறியுள்ளனர். நபரும் அவர்களுடன் ஏறியுள்ளார். இந்நிலையில், சிறுமிகளிடம் ஆபாசமாக பேசிய அவர் அவர்களின் உடல்களையும் அத்துமீறி தீண்டியுள்ளார்.

அதிர்ச்சியடைந்த சிறுமிகள் பெற்றோர்களுக்கு தெரிவிக்க பொலிசார் உடனடியாக தேடுதல் வேட்டையை தொடங்கி நபரை கைது செய்தனர். மேலும், அதே பகுதியை சேர்ந்த 8 வயது சிறுவன் ஒருவனும் பெற்றோருடன் கைது செய்யப்பட்ட நபர் மீது பாலியல் புகாரை பதிவு செய்துள்ளான்.

இந்த சம்பவம் தொடர்பாக இன்று பொலிசார் வெளியிட்டுள்ள செய்தியில், கைது செய்யப்பட்டுள்ள நபர் மொரோக்கோ நாட்டை சேர்ந்தவர் என்றும், வன்புனர்வு செய்யும் நோக்கத்துடனே சிறுமிகளிடம் அத்துமீறி நடந்துக்கொண்டுள்ளார்.

சிறுமிகளிடம் தவறு செய்ய முயன்றதை நபர் ஒப்புக்கொண்டுள்ள நிலையில் அவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடைபெற்று வருவதாக தெரிவித்துள்ளனர்.

SHARE