சுவிஸில் தீவிரவாதி என்று மாணவனை கைது செய்த பொலிஸ் நடந்தது என்ன?

186

625.500.560.350.160.300.053.800.748.160.70 (2)

சுவிட்சர்லாந்தின் சூரிச் பகுதியில் தீவிரவாதி என கருதி மாணவர் ஒருவரை பொலிசார் கைது செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Ticino பகுதியில் இருந்து விடுமுறைக்கு பின்னர் சூரிச் சென்றுகொண்டிருந்தார் பல்கலைக்கழக மாணவர் ஒருவர். இதனிடையே தன்னிடம் இருக்கும் துப்பாக்கியை உடன் எடுத்துவர முடியுமா என அங்கிருந்த ராணுவத்தினரிடம் விசாரித்துள்ளார்.

காரணம் ரயில் பயணத்தின்போது ஆயுதம் எடுத்துச் செல்ல முடியாது என்றால் அது தமது பயணத்தை கெடுத்துவிடும் என்பதால் முன்னெச்சரிக்கையாக மாணவர் விசாரித்துள்ளார்.

அதற்கு ராணுவத்தினர் அனுமதி அளித்துள்ளதை தொடர்ந்து அந்த மாணவர் ரயிலில் பயணம் மேற்கொண்டுள்ளார்.

இந்நிலையில் தமது பை சிறிதாக இருந்தபடியால் தனது துப்பாக்கியை தோளில் தொங்கவிட்டபடி அந்த மாணவர் பயணத்தை தொடர்ந்துள்ளார்.

ரயில் பயணத்தில் எந்த பிரச்னையும் இன்றி சூரிச் முக்கிய ரயில் நிலையத்தில் வந்து சேர்ந்துள்ளார். அங்கிருந்து தமது வீட்டிற்கு செல்ல டிராம் வண்டி ஒன்றில் ஏறி குறிப்பிட்ட பகுதியில் இறங்கவும், திடீரென்று அப்பகுதிக்கு வந்த வாகனத்தில் இருந்து சில பொலிஸ் அதிகாரிகள் இறங்கி வந்து துப்பாக்கி முனையில் அந்த மாணவனை கைது செய்துள்ளனர்.

மேலும் தங்களது அதிகாரிகளுக்கும் தகவல் தெரிவித்துக்கொண்டனர். இதனிடையே அந்த மாணவன் எடுத்து வந்த பையை சோதனையிட்ட பொலிசார், அதில் மாணவனின் பல்கலைக்கழக அடையாள அட்டை மற்றும் ஆவணங்கள் இருந்துள்ளதை கண்டுள்ளனர்.

தங்களுக்கு கிடைத்த தகவலின்படியே கைது நடவடிக்கையில் இறங்கியதாகவும் பொலிசார் பின்னர் வருத்தம் தெரிவித்துள்ளனர். மேலும் தற்போதைய சூழலில் சந்தேகத்துடனே அனைத்தையும் பார்க்க வேண்டிய கட்டாயத்தில் பொலிஸ் இருப்பதாகவும் கூறினர், மட்டுமின்றி பொதுமக்கள் பார்க்கும்படி துப்பாக்கியை எடுத்துச்செல்ல வேண்டாம் எனவும் அவர்கள் அந்த மாணவனிடம் அறிவுறுத்தியுள்ளனர்.

பொலிசாரின் அந்த நடவடிக்கைகள் 10 நிமிடத்தில் முடிந்ததாகவும், அந்த 10 நிமிடமும் தமக்கு மரண பயத்தை காட்டியதாகவும் மாணவன் தெரிவித்துள்ளார்.

SHARE