சுவிஸில் பயங்கரம் காட்டில் நாயுடன் நடைப்பயிற்சி சென்ற பெண் படுகொலை

296

swiss-1

சுவிஸ் தலைநகர் பெர்னில் உள்ள காட்டு பகுதியில் பெண் ஒருவர் மர்மமான முறையில் இறந்து கிடந்துள்ள சம்பவம் அப்பகுதி மக்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Orpund பகுதியில் உள்ள காட்டில் நாயுடன் நடைப்பயிற்சி சென்ற ஒரு பெண், காட்டில் அடையாளம் தெரியாத பெண் ஒருவர் மர்மமான முறையில் இறந்து கிடந்ததை கண்டுள்ளார். அப்போது அவரது உடலுக்கு பக்கத்தில் அவரது நாய் காத்து கொண்டிருந்துள்ளது.

இதை கண்ட அவர் பொலிசாருக்கு தகவல் தெரிவித்துள்ளார். தகவல் அறிந்து சம்பவயிடத்திற்கு விரைந்த அவசர சேவை, பெண் உயிரிழந்ததை உறுதிசெய்துள்ளது.

ஆனால், தடயவியல் நிபுனர்கள் நடத்திய ஆய்வில், குறித்த பெண் கூர்மையான ஆயுதங்களால் தாக்கப்பட்டதின் மூலம் உயிரிழந்திருக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த காடு நாய் நடைப்பயிற்சிக்கு பிரபலமாக திகழ்கிறது. தற்போது குறித்த பெண்ணின் மரணம் அப்பகுதி வசிகளிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது.

அப்பகுதி வசி ஒருவர் கூறியதாவது, சம்பவம் குறித்து பொலிசார் அவர்களுக்கு எந்த தகவலும் அளிக்கவில்லை எனவும், கொலையை நேரில் பார்த்த சாட்சிகள் குறித்து விசாரணை நடத்தியதாக தெரிவித்துள்ளார்.

தற்போது வரை உயிரிழந்த பெண் குறித்த எந்த தகவலும் வெளியாகவில்லை, மேலும், சம்பவம் குறித்து அறிந்தவர்கள் பொலிசாருக்கு தகவல் அளிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

SHARE