சுவிஸில் புதிய கரண்ஸி தாள்கள் அறிமுகம்

212

சுவிஸ் நாட்டின் நாணயம் என்றால் அது பிராங்க்(franc) தான். இந்த கரண்ஸியை மட்டுமே நாடு முழுவதிலும் மக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.

ஆனால், சுவிஸ் மாகாணங்களில் ஒன்றான வாலைஸில் உள்ளூர் மக்கள் மட்டும் பயன்படுத்துவதற்காக புதிய கரண்ஸி தாள்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

இம்மாகாணத்தில் உள்ள Sion நகரில் farinets என்று அழைக்கப்படும் புதிய கரண்ஸி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

franc கரண்ஸிக்கு உள்ள பணமதிப்பு இந்த புதிய கரண்ஸிக்கும் உள்ளது.

View image on Twitter

தற்போது இந்நகரில் மட்டும் பயன்படுத்துவதற்காக 1, 2, 5, 10, 13, 20, 50 மற்றும் 100 கரண்ஸி தாள்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

இந்நகரில் உள்ள 100 வர்த்தக மையங்கள், தொழிற்கூடங்கள் மற்றும் பிற வியாபார ஸ்தாபனங்கள் இக்கரண்ஸியை பிராங்கிற்கு பதிலாக பெற்றுக்கொள்ள சம்மதம் தெரிவித்துள்ளன.

பிராங்க் உள்ளபோது புதிய கரண்ஸி அறிமுகப்படுத்தியுள்ளதால் அதிகளவிலான பணப்புழக்கத்தை கட்டுப்படுத்த முடியும்.

அதாவது, இம்மாகாணத்தை விட்டு வெளியே இந்த புதிய கரண்ஸியை பயன்படுத்த முடியாது என்பதால் பிராங்க் மற்றும் farinets கரண்ஸிகளின் பணப்புழக்கத்தை கட்டுப்படுத்த முடியும் என்பது தான் இத்திட்டத்தின் முக்கிய நோக்கமாகும்.

வாலைஸ் மாகாணத்திற்கு முன்னதாக கடந்த 2015-ம் ஆண்டு ஜெனிவா மாகாணம் leman என்ற உள்ளூர் கரண்ஸியை அறிமுகப்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

SHARE