சுவிட்ஸர்லாந்து நாட்டில் இருக்கும் பெண்கள் வெளிநாட்டவர்களினால் அதிகம் பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
2015ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் கடந்த ஆண்டு அதிகளவில் பாலியல் துஸ்பிரயோக சம்பவங்கள் பதிவாகி உள்ளதாக அந்நாட்டு காவல்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது.
குறிப்பாக புலம்பெயர்ந்துள்ள வெளிநாட்டவர்களினாலேயே இந்த பாலியல் வன்கொடுமைகள் அதிகம் ஏற்பட்டுள்ளதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, சுவிட்ஸர்லாந்தில் கடந்த ஆண்டு பாலியஸ் துஸ்பிரயோகத்துடன் தொடர்புடையதாக 495 பேர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
குறித்த 495 பேரில் 298 பேர் வெளிநாடுகளைச் சேர்ந்தவர்கள் எனவும், 51 பேர் சுவிட்ஸர்லாந்தில் புகலிடம் கோரி அகதிகளாக இருப்பவர்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், இதனுடன் தொடர்புடைய புலம்பெயர்ந்தவர்களுக்கு எதிராக கடுமையான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.