சுவிஸ் நாட்டில் மது போதையுடன் வாகனம் ஓட்டுபர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக ஆய்வறிக்கை ஒன்று தெரிவித்துள்ளது.
சுவிஸ் வாகனம் ஓட்டிகளில் 17 சதவிகிதம் பேர் மது போதையில் மட்டுமே வாகனம் ஓட்டுவதாக ஒப்புக்கொண்டுள்ளனர்.
ஐரோப்பா முழுவதும் எடுக்கப்பட்ட இந்த ஆய்வில் சுவிஸ் மூன்றாவது இடத்தில் உள்ளது. 22 சதவிகிதத்துடன் பிரான்ஸ் முதலிடத்திலும் 18 சதவிகிதத்துடன் பெல்ஜியம் இரண்டாவது இடத்திலும் உள்ளது.
ஐரோப்பாவின் 17 நாடுகளில் குறிப்பாக தனியார் நிறுவனம் ஒன்று இந்த ஆய்வினை மேற்கொண்டுள்ளது. இதில் பல நாடுகளில் உள்ள வாகனம் ஓட்டிகள் மிக அரிதாகவே மது அருந்திய பின்னர் வாகனம் ஓட்டுவதாக பதிவு செய்துள்ளனர்.
போலந்து நாட்டில் 4 சதவிகிதம் பேர் மட்டுமே மது போதையுடன் வாகனம் ஓட்டுகின்றதாக ஆய்வில் தெரிவித்துள்ளனர். இந்த வரிசையில் பின்லாந்து நாட்டினரில் ஒரு சதவிகிதம் பேர் மட்டுமே மது அருந்திய பின்னர் வாகனம் ஓட்டுகின்றனர். சுவீடனில் இது 2 சதவிகிதமாக உள்ளது.
இதனிடையே இந்த ஆய்வு குறித்து கருத்து தெரிவித்துள்ள சுவிஸ் விபத்து தடுப்பு பணியகம், போதை மற்றும் மதுவுக்கு எதிரான விழிப்புணர்வுகளில் சுவிஸ் மிகவும் பிந்தங்கியுள்ளதாகவும், மட்டுமின்றி போதிய ஆதரவு அளிக்கவும் மறுத்து வருவதாக குற்றம்சாட்டியுள்ளது.
இதை விடுத்தால் சுவிஸ் வாகனம் ஓட்டிகள் எஞ்சிய 16 ஐரோப்பிய நாட்டவர்களைப் போன்றே நடந்து கொள்கின்றனர் என சுவிஸ் விபத்து தடுப்பு பணியகம் தெரிவித்துள்ளது.
மது மட்டுமின்றி, 35 சதவிகித சுவிஸ் வாகன ஓட்டிகள் தங்கள் வாகனத்தை செலுத்தும் போதே கைப்பேசி பயன்படுத்தி வருகின்றனர். ஒட்டு மொத்த ஐரோப்பாவை பொறுத்தமட்டில் சராசரியாக 38 சதவிகிதத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.