சுவிஸில் மாடுகளுக்கு அக்குபஞ்சர் முறையில் வைத்தியம்

284

சுவிற்சர்லாந்தில் பசுக்களுக்கு ஊக்கமருந்துகள், நுண்ணுயிர் கொல்லிகளை செலுத்துவதற்கு பதில் அக்குபஞ்சர் முறை அமுலுக்கு வர வாய்ப்புள்ளதாக தெரிகிறது.

சுவிஸில் மாட்டிறைச்சிகாக கொல்லப்படும் மாடுகள் மரணிக்கும் வரை ஆரோக்கியமாக இருக்க ஊக்க மருந்துகள், எதிப்பு அழற்சி முறைகள், உயிர் கொல்லிகள் போன்ற விடயங்கள் மாடுகள் மீது செலுத்தப்படுகிறது.

இப்படி செய்யப்படும் மாடுகளின் மாட்டிறைச்சியை சாப்பிட்டால் பாக்டீரியா, பூஞ்சை, வைரஸ் கிருமிகள் போன்ற நுண்ணுயிர் தொற்று பிரச்சனைகள் மனிதர்களுக்கு ஏற்படும் என உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது.

இதற்கு மாற்று வழியாக சீனாவில் உதயமான பழமைவாய்ந்த அக்குபஞ்சர் முறையை மாடுகள் மீது செலுத்த சுவிஸ் அரசு முடிவு செய்துள்ளது.

அதன்படி, கால்நடை படிப்பை படிக்கும் மாணவர்களுக்கு அக்குபஞ்சர் முறையில் கைதேர்ந்தவர்கள் பயிற்சியளிக்கவுள்ளார்கள்.

பசு மாடுகளின் ஆரோக்கியத்துக்கு கேடு ஏற்பட்டால் இந்த முறைப்படி ஊசியை உடலில் செலுத்தி அதை சரி செய்ய முடியும்.

இதன் மூலம் பசுக்கள் மாட்டிறைச்சிகாக கொல்லப்படும் வரை ஆரோக்கியமாக இருக்கும். Holstein வகை மாடுகள் மீது அடுத்த மாதம் இந்த சிகிச்சை முயற்சி நடைபெறவுள்ளது

SHARE