சுவிட்சர்லாந்து நாட்டில் நடைபெற உள்ள நகராட்சி தேர்தலில் பெரும்பான்மையான வாக்குகள் வித்தியாசத்தில் தன்னை வெற்றி பெற செய்ய வேண்டும் என இலங்கை நாட்டை சேர்ந்த தமிழ் வேட்பாளர் கோரிக்கை விடுத்துள்ளார்.
இலங்கையில் இருந்து 32 ஆண்டுகளுக்கு முன்னர் சுவிஸில் குடியேறிய V. Gowry Truffer (VimalagowryVimalanathan) என்பவர் சுவிஸ் வாழ் தமிழர்களுக்காக தன்னை அற்பணித்துக்கொண்டது மட்டுமல்லாமல் அரசியலில் ஈடுப்பட்டு பல்வேறு சாதனைகளையும் புரிந்துள்ளார்.
எதிர்வரும் அக்டோபர் 30-ம் திகதி பேர்ன் மாகாணத்தில் உள்ள Heimberg நகராட்சி தேர்தலில் வி.கெளரி ட்ரூபர் வேட்பாளராக போட்டியிடுகிறார்.
இந்த தேர்தல் தொடர்பாக அவர் சுவிஸ் வாழ் தமிழர்களுக்கு விடுத்துள்ள கோரிக்கை இதோ !
‘சுவிஸ் வாழ் தமிழர்களுக்கு வணக்கம். இலங்கையில் பிறந்த நான் 32 ஆண்டுகளுக்கு முன்னர் சுவிஸில் குடியேறினேன். இந்த 32 ஆண்டுகளில் ஒருமுறை கூட நான் தாயகம் திரும்பவில்லை. இது நீண்ட காலம் தான்.
இங்கு சுவிஸில் எனது குடும்பம் மற்றும் சுற்றும் சூழ நண்பர்களும் உள்ளனர்.
பொதுவாழ்வில் தன்னை ஈடுப்படுத்திக்கொண்டு சுவிஸில் வாழும் தமிழர்களுக்கு பயனுள்ள நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தில் 10 ஆண்டுகளுக்கு முன்னர் Heimberg நகர SP கட்சியில் சேர்ந்தேன்.
இக்காலக்கட்டத்தில் பொதுவாழ்வில் ஈடுப்பட்ட தமிழ் பெண்களில் நானும் ஒருவர் என்பதில் பெருமை கொள்கிறேன்.
பொதுவாழ்வில் ஈடுப்பட்டது, அரசியலில் நுழைந்தது என அனைத்தும் எனது சொந்த உழைப்பிலும், முயற்சியிலும் நடந்தது என்பது ஒரு பெருமைக்குரிய விடயம் தான்.
இதுமட்டுமல்லாமல், புகலிடம் கோரி வந்த ஒரு பெண்ணான நான் இத்தனை தூரம் வெற்றிகரமாக பயணம் மேற்கொண்டு வருவதும் இதற்கு இங்குள்ளவர்களின் ஆதரவும் அரவணைப்பும் கிடைத்துள்ளது எனக்கு பெருமகிழ்ச்சியை ஏற்படுத்துகிறது.
கடந்த 10 ஆண்டுகளாக Heimberg நகர பாடசாலை கமிட்டியின் உறுப்பினராக பொறுப்பு வகித்து வருகிறேன். அதாவது, SP Heimberg (Social Democratic Party) கட்சியில் இருந்து இந்த மரியாதைக்குரிய பொறுப்பிற்கு உயர்ந்துள்ளேன்.
இந்த வாய்ப்பு கிடைத்தபோது அதை பற்றி நான் அதிகம் சிந்திக்கவில்லை. உடனடியாக சம்மதம் தெரிவித்தேன். ஆனால், இத்தனை ஆண்டுகளாக இப்பொறுப்பில் இருக்கிறேன் என்பது மகிழ்ச்சிகரமான விடயம் தான்.
பாடசாலை கமிட்டி உறுப்பினராக பொறுப்பு ஏற்ற பிறகு இரவும் பகலும் நடைபெற்ற பல ஆலோசனை கூட்டங்களில் பங்கேற்றுள்ளேன். பாடத்திட்டங்களை பற்றியும், மாணவர்களின் கல்வி முறைகளை பற்றியும் பல ஆலோசனைகளையும் விவாதங்களையும் நடத்தியுள்ளோம்
இதுமட்டுமில்லாமல், புதிய தொழிற்பயிற்சி பெருபவர்களின் கூட்டங்களிலும், பாடசாலை மற்று ஆசிரியர்களுக்காக நடத்தப்படும் கூட்டங்களிலும் பங்கேற்றுள்ளேன்.
இங்குள்ள தேவாலயத்திற்காகவும், பாடசாலைக்காவும் எந்நேரத்திலும் எனது உழைப்பை பயன்படுத்தி வந்துள்ளேன். உங்களுக்கு என்னைப் பற்றி நன்றாக தெரியும். இங்குள்ள மக்கள் என்னை மரியாதையாகவும் மதிப்பு வாய்ந்தவராகவும் நடத்துவது பெருமைக்குரிய விடயம்.
எனக்கு எந்த பொறுப்பு கொடுத்தாலும் அதை நான் சிறப்பாகவும் பொதுமக்களின் நன்மைக்காவும் செய்வேன் என்பதை எனக்கு இந்த வாய்ப்பளித்தவர்கள் நன்கு அறிந்துள்ளனர். அதே சமயம், எனது கணவரின் ஆதரவு இல்லாமல் இந்த இடத்திற்கு என்னால் வந்திருக்க முடியாது என்பதும் உண்மை தான்.
எனது பொதுப்பணியையும், பங்களிப்பையும் அங்கீகரிக்கும் வகையில் தான் தற்போது Heimberg நகர SP கட்சியின் தலைவராக கடந்த சில ஆண்டுகளாக பதவி வகித்து வருகிறேன்.
இப்பதவியின் மூலம் பல கூட்டங்களை நடத்தி அதற்கு தலைமை தாங்கியிருக்கிறேன். குறிப்பாக, தூன் மற்றும் பேர்ன் நகரங்களில் பல கூட்டங்களை சிறப்பாக நடத்தி கட்சியிடமும் பொதுமக்கள் மத்தியிலும் நற்பெயர் பெற்றுள்ளேன்.
Heimberg, தூன் நகரங்கள் மட்டுமின்றி பேர்ன் நகரத்திலும் பொதுமக்கள் என்னை நன்கு அறிந்துள்ளனர். ஏனெனில், கடந்த பல ஆண்டுகால தன்னலம் இல்லாத எனது பொதுவாழ்க்கை எனக்கு இம்மக்கள் மத்தியில் நற்பெயரை பெற்று தந்துள்ளது.
இதுமட்டுமல்லாமல், ஒவ்வொரு தேர்தலிலும் நான் ballot leader-ஆகவும் என்னை நிரூபித்துள்ளேன். ஒவ்வொரு தேர்தலும், ஒவ்வொரு வாக்கும் நமக்கு அவசியம் தான்.
சுவிஸில் உள்ள இளம் தமிழ் பெண்களுக்கும் மற்றும் பிற இளைய சமுதாயத்தினருக்கும் நான் ஒரு சிறந்த உதாரணமாக இருக்கிறேன் என நம்புகிறேன்.
வாழ்க்கையில் நீங்கள் ஒரு இலக்கை அடைய உறுதியாகவும் பொறுமையாகவும் இருந்தால், நிச்சயம் அதனை அடைவீர்கள். வலி இல்லை என்றால் ஆதாயமும் இல்லை என்பது உண்மை தானே?
எனவே, எதிர்வரும் அக்டோபர் 30-ம் திகதி நடைபெறவுள்ள Heimberg நகராட்சி தேர்தலில் பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் என்னை வெற்றி பெற வைக்க வேண்டும் என அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.’
Heimberg நகராட்சி வேட்பாளரான V. Gowry Truffer (VimalagowryVimalanathan) இதுவரை வகித்த பொறுப்புகள் மற்றும் பதவிகள் !
Since 2009 President SP Heimberg
Since 2007 member of the school committee Heimberg
2008 Candidate Local elections Heimberg
Since 2009 Election and voting leader
Since 2009 to 2014 Ok youth work Heimberg
Since 2006 to 2009 German course teacher for foreigners in FEG Steffisburg
2014 Candidate of the Grossratswahlen Canton of Berne
Since 2014 OK Flohmärit Leist upper au Heimberg