சுவிஸ்குமாரின் தாயார் சிறையில் மரணம்!

289

vithya_swisskumar1-7

புங்குடுதீவு மாணவியின் கொலை வழக்கில், மாணவியின் தாயை மிரட்டிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட சந்தேகநபரான சுவிஸ் குமார் என்று அழைக்கப்படும் மகாலிங்கம் சசிக்குமார் என்பவரின் தாயார் யாழ்ப்பாணச் சிறைச்சாலையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (17) உயிரிழந்துள்ளார்.

மகாலிங்கம் தவநிதி என்பவரே உயிரிழந்த பெண்ணாவார்.

கடந்த மே மாதம் 4ஆம் திகதி ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்றில் நடைபெற்ற வழக்கு விசாரணையின் போது, சந்தேகநபர்களின் உறவினர்கள் தன்னை மிரட்டுவதாக, கொலை செய்யப்பட்ட புங்குடுதீவு மாணவியின் தாயார், நீதவானின் கவனத்துக்குக் கொண்டு வந்தார்.

மாணவியின் தாயாரின் முறைப்பாட்டுக்கு இணங்க நடவடிக்கை எடுத்த ஊர்காவற்றுறைப் பொலிஸார், சுவிஸ்குமாரின் தாயாரையும் அவரின் மற்றுமொரு உறவினரையும் கைதுசெய்து விளக்கமறியலில் வைத்தனர்.

சுவிஸ்குமாரின் தாயார், சிறையில் இருக்கும் போது, உடல் நலக்குறைவு காரணமாக நீதிமன்ற அனுமதியுடன் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் நேற்று (17) உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

SHARE