சுவிஸ்ஸில் தீக்கிரையான ஹொட்டல்

136

சுவிட்சர்லாந்தில் St Gallen மாகாணத்தில் அமைந்துள்ள ஹொட்டல் ஒன்று தீக்கிரையானதில் இருவர் கொல்லப்பட்டதுடன் 2 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

St Gallen மாகாணத்தில் அமைந்துள்ள பிரபல ஹொட்டல் ஒன்றில் ஞாயிறு இரவு தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் அந்த ஹொட்டலானது முற்றாக சேதமடைந்துள்ளது.

அதிகாலை 3.20 மணியளவில் தீயணைப்பு மற்றும் மீட்பு குழுவினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் சம்பவப்பகுதிக்கு விரைந்து சென்ற அதிகாரிகள் தீயை கட்டுக்குள் கொண்டுவந்துள்ளனர்.

இந்த தீ விபத்தில் சிக்கி மரணமடைந்தவர்கள் இருவரையும் இதுவரை எவரும் அடையாளம் காணவில்லை என தெரியவந்துள்ளது.

தீ விபத்தில் சிக்கி முற்றாக சேதமடைந்துள்ள ஹொட்டலில் 60-கும் மேற்பட்ட தீயணைப்பு மற்றும் மீட்பு குழுக்கள் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

மேலும் தீ விபத்து ஏற்பட்டபோது அந்த ஹொட்டலில் இருந்த நபர்கள் தொடர்பிலும் விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதுவரை மாயமானவர்கள் தொடர்பில் எந்த புகாரும் தெரிவிக்கப்படாத நிலையில், அடுத்தக்கட்ட விசாரணையில் மேலதிக தகவல் வெளியாகும் என விசாரணை அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

SHARE