சுவிஸ் எழுகை அமைப்பினர் தாயக உறவுகளுக்கு வெள்ள நிவாரண உதவி…

259

 

கடந்த மாதத்தில் இருந்து பெய்து வருகின்ற கடும் மழையினால் பாதிக்கப்பட்டு இருக்கின்ற கண்ணகிநகர் கிராம 355 குடும்பங்களுக்கு கடந்த வாரம் சுவிஸ் எழுகை அமைப்பின் ஊடாக பாராளுமன்ற உறுப்பினர் சிறீதரன் அவர்களின் ஏற்பாட்டில் வெள்ள நிவாரணப் பொதிகள் வழங்கப்பட்டது.

1440_526375364189899_5866305804519057539_n 936613_526375027523266_654642176217799152_n 944072_526374914189944_5082743855533579852_n 10320426_526374907523278_8532862275848488787_n 12508974_526375067523262_3532673160180385716_n

இங்கு உரை நிகழ்த்திய தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் கொள்கை பரப்பு செயலாளர் வேழமாலிகிதன் யுத்தத்தினால் பாதிக்கப்பட்டு இருக்கின்ற எமது மக்களுக்கு பாதுகாப்பான நீண்டகால வாழ்வாதார வேலைத்திட்டம் இன்னும் இந்த நல்லாட்சி அரசு வழங்கப்படவில்லை என்று அந்நிகழ்வின் போது அவர் தெரிவித்தார்.

மேலும் அவர் தெரிவிக்கையில் கிளிநொச்சி பிரதேசத்தில் வறுமை தலை தூக்கி ஆடுகிறது. கடந்த மாதத்தில் ஏற்பட்ட வெள்ளத்தினால் கடற்றொழிலை நம்பி இருக்கின்ற கண்ணகிநகர் மக்கள் இயல்பு வாழ்க்கையை இழந்து தொழில் வாய்ப்புக்கள் ஏதும் அற்று ஒருவேளை சாப்பாட்டுக்காக என்ன செய்வது நினைத்துக்கொண்டு இருக்கும் போது அந்த நேரத்தில் வெளிநாட்டில் இருக்கின்ற எமது உறவுகளின் நினைவுகள் எமது மண்ணை நோக்கி இருக்கிறது இங்கு இருக்கின்ற மக்கள் தமது உறவுகள் என்றும் அவர்கள் எங்களை நினைக்கிறார்கள் என்றும் அவர்கள் உமது இனத்தவர்கள் என்றும் எமக்கு உதவிகள் செய்கிறார்கள்.

இந்த நல்லாட்சி காலத்தில் யுத்தத்தினாலும் கடந்த வெள்ளத்தினாலும் நவிவுற்று இருக்கின்ற எமக்கு இந்த அரசு வாழ்வாதரத்தை மேம்படுத்துவதற்கு நீண்டகாலத்திட்டம் எதனையும் மேற்கொள்ளவில்லை ஆனால் இராணுவத்தினர்களுக்கும் அவர்களது பிள்ளைகளுக்கும் ஓய்வூதியங்களும், புலமைப்பரிசில்களும்,

நீண்டகால வாழ்வாதாரமாக வழங்கப்பட்டு கொண்ட இருக்கின்றது. யுத்தத்தினைகாட்டி அரசு பல நிதிகள் வெளிநாடுகளிடம் இருந்த பெறுகின்றது அந்த நிதிகள் அபிவிருத்தி என்ற பௌரில் செயற்படுகிறதே தவிர மக்களின் வாழ்க்கை தரத்தினை முன்னேற்றுவதற்கான எந்த வேலைத்திட்டமும் மேற்கொள்ளப்படவில்லை ஆகவே வறுமையை தனிப்பதற்கு நிரந்தமான பாதுகாப்பான வேலைத்திட்டம் அரசு முன்னெடுக்க வேண்டும் என்றார்.

குமரன் தலைமையில் இடம்பெற்ற இந் நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் சிறீதரன் ,வடமாகாணசபை உறுப்பினர் சுபதிப்பிள்ளை,

கட்சியின் கொள்கை பரப்பு செயலாளர் வேழமாலிகிதன், முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் புஸ்பராசா, தம்பிராசபுரம் உழவனூர் செயற்பாட்டாளர் தீபன், முன்னைனாள் கிராமசேவையாளர் சண்முகநாதன் மற்றும் சச்சிதானந்தம் ஆகியோர் கலந்து கொண்டனர்.

SHARE